Politics

சட்டையை மாற்றினாலும் செருப்பால் சிக்கிய திமுகவின் கருத்தாண்டி...!

சட்டையை மாற்றினாலும் செருப்பால் சிக்கிய திமுகவின் கருத்தாண்டி...!
சட்டையை மாற்றினாலும் செருப்பால் சிக்கிய திமுகவின் கருத்தாண்டி...!

தமிழகத்தில் திமுக பதவி ஏற்கும் முன்னரே மாநிலத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்கள் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளன.


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இன்னும் ஒரிரு நாளில் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.இந்த சூழலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, இப்போது ஆட்சியை இழந்துள்ளது. இந்த சூழலில் சென்னையில் திமுகவினர் அம்மா உணவத்திற்கு புகுந்த சூறையாடி உள்ளனர்.

இனி அம்மா உணவகம் என்ற பெயரில் உணவகங்கள் இருக்ககூடாது என்று பெயர் பலகைகளை உடைத்து போட்டு அங்கிருந்தவர்களை மிரட்டினர்.சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த செயலை செய்தவர்கள் திமுகவினர் தான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தொற்று பரவி வரும் வேளையில் ஊரடங்கு போடப்படுகிறது. ஊரடங்கு நாட்களில் ஏழை தொழிலாளர்களுக்கு, அம்மா உணவகம் பெரிதும் கைகொடுத்து வருகிறது. எனவே அந்த சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும் என ஏழைகள், கூலி தொழிலாளிகள் எதிர்பார்த்த நிலையை திமுகவினர் செயல்பாடு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

பதவி ஏற்கும் முன்னரே திமுகவினர் கலவர போக்கை தொடங்கிவிட்டனர் என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன, பலர் திமுகவினர் செயல்பாடுகளை கண்டித்தனர், இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்ட திமுகவினரே மீண்டும் உடைத்த பெயர் பலகைகள், ஜெயலலிதா புகைப்படத்தை அதே உணவகத்தில் வைத்து பாவ மன்னிப்பு பெற்றுள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால் மஞ்ச சட்டை அணிந்து அம்மா பெயர் பலகையை உடைத்து கடையை சூறாயாடிய திமுக நபர், வெள்ளை சட்டையில் வந்து தான் அவன் இல்லை என்பது போல் மாறு வேடத்தில் வந்தார், ஆனால் அவரது செருப்பு கடையை உடைத்தவர் அவர் தான் என அடையாளம் காண உதவியுள்ளது.

செருப்பை கொண்டு கடையை உடைத்தவரை அடையாளம் கண்ட நெட்டிசன்கள், திமுகவின் கருத்தாண்டி சிக்கிவிட்டார் என கிண்டல் அடித்து வருகின்றனர் . சட்டையை மாத்தினாலும் செருப்பை மாற்ற மறந்துவிட்டாரே.. இந்த உடன் பிறப்பு.