Tamilnadu

தோல்வியை கிண்டல் செய்த சவுக்கு சங்கர் குறித்து வைத்து கொள் அதிரடி பதில் கொடுத்த அண்ணாமலை

Annamalai ips savukku shankar
Annamalai ips savukku shankar

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் இதுவரை 215 தொகுதிகளுக்கான முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைய உள்ளது.


இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கிய தொகுதிகளில் ஒன்று அரவக்குறிச்சியும் ஒன்று பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட காரணத்தால் நட்சத்திர தொகுதியாக அரவகுறிச்சி மாறியது, இந்த தேர்தலில் அண்ணாமலை தோல்வியை தழுவினார். அண்ணாமலையின் தோல்வியை கிண்டல் செய்து சவுக்கு சங்கர் ட்வீட் ஒன்றை செய்தார் அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

(உங்கள் பெயர் எனக்குத் தெரியாது) அண்ணா.  இந்த செய்தியைக் குறித்து வைத்துகொள்ளவும் )👍அடுத்த ஐந்து ஆண்டுகளில் @ BJP4TamilNadu இன் மிகப்பெரிய வளர்ச்சியை நீங்கள் காண்பீர்கள்.  நீங்களும் உங்கள் ‘தோழர்களும் தயாராகுங்கள்.நாங்கள் வீதி சண்டையை சந்திப்போம்,நான் தோற்றது ஒரு பொருட்டல்ல, நாங்கள் இன்று நான்கு எம்.எல்.ஏ.க்களுடன் தொடங்குகிறோம்!என பதிலடி கொடுத்துள்ளார்.

அண்ணாமலையின் தோல்வியை கிண்டல் செய்த சவுக்கு சங்கருக்கு அண்ணாமலை கொடுத்த பதிலடி மிகுந்த முக்கியத்துவம் உடையதாக பார்க்க படுகிறது