Tamilnadu

பிரசாரத்தின் போது குழந்தை பெற்றெடுத்த பாஜக வேட்பாளர் எத்தனை வாக்குகள் பெற்றார்? திரில் சம்பவம்!!

Kadayanallur Municipality
Kadayanallur Municipality

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியானது தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 


தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் குமந்தாபுரத்தை சேர்ந்தவர் ரேவதி.

இவர் கடையநல்லூர் நகராட்சி 1வது வார்டு பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், கணவர் மற்றும் கட்சி தொண்டர்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த சூழலில் நேற்று வெளியான தேர்தல் முடிவில் பாஜக வேட்பாளர் ரேவதி 738 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான ரேவதி வெற்றியை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்,இது குறித்து கருத்து தெரிவித்த ரேவதி பாஜகவின் சாதனைகளை எனது பகுதி மக்களுக்கு எடுத்து கூறுவேன் மேலும் எனது வார்டை முன்மாதிரி வார்டாக மாற்ற பாடு படுவேன்,எனது கணவர் நான் மட்டுமல்லாமல் இனி எனது குழந்தையுடனும் மக்கள் பணி செய்து பாஜக மேலும் வளர உறுதுணை செய்வேன் என குறிப்பிட்டுள்ளார் ரேவதி.

தமிழகத்தில் தாமரை சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை மலர்ந்து இருப்பதால் பாஜகவை தீவிரமாக எதிர்த்து வந்த பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

More Watch Videos