Tamilnadu

பாஜக "வெற்றியை" பார்த்து கதறிய சுந்தரராஜன் முறையான பதிலடி கொடுத்த எழுத்தாளர்..!

Sundararajan
Sundararajan

பூவலகின் நண்பர்கள் என்ற அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் பாஜகவின் நகராட்சி தேர்தல் வெற்றி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதில் முற்போக்கு சக்திகள் சின்ன சின்ன வேறுபாடுகளை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு களத்தில் வேலை செய்யவில்லை எனில், 18/19 ஆம் நூற்றாண்டுகளில் ஆரம்பித்த சமூக மாற்றங்களை இழக்க நேரிடும். இது நடைபெறவில்லை என்றால் தமிழ்நாடு நம்ம தமிழ்நாடாக இருக்காது.என குறிப்பிட்டு இருந்தார்.


இந்த சூழலில் அவருக்கு புரியும் வகையில் முறையான பதிலடியை கொடுத்துள்ளார் எழுத்தாளர் சுந்தரராஜ சோழன் அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-

இதுபோன்ற கீழ்த்தரமான பொய்களை கட்டவிழ்த்தே பாஜக பூச்சாண்டியை காட்டி வருகிறார்கள்...உண்மையான சமூகநீதியின்,வளர்ச்சியின் குறியீடுதான் பாஜக எழுச்சி..OBC பிரதமரையும்,பட்டியல் சமூக ஜனாதிபதியையும் ஹிந்துத்துவாதான் கொடுத்துள்ளது..வேறெந்த சித்தாந்தமும் தரவில்லை.



பாஜக யாரையும் குடும்ப கொத்தடிமைகளாக,சாதிய மேட்டிமைவாதிகளை உருவாக்கவில்லை..அது உருவாக்கியது எல்லாம் சாதிய - மதவாதங்களை கடந்த தேசியவாதிகளையே..பூவுலகு போன்றவர்களின் திரிபுகளை மறுதலிக்கத்தான் அன்றே மாநிலத் தலைவர் அண்ணாமலை இப்படி சொல்லியுள்ளார்..👇

#கேள்வி : தமிழ்நாட்டில் நீங்கள் முக்கியமான விஷயமாக சமூக நீதியைக் குறிப்பிட்டீர்கள். பா.ஜ.க. ஆட்சியை நெருங்கும்பட்சத்தில் அதன் சமூக நீதி பார்வை என்னவாக இருக்கும்? இப்போது திராவிடக் கட்சிகள் முன்வைக்கும் சமூக நீதியை நீங்கள் தொடர்ந்து எடுத்துச் செல்வீர்களா?

அண்ணா : நான் ஒரு படி முன்னே போய் சொல்கிறேன்.Dravidian Plus என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்புகிறேன். சமூக நீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு அல்ல.அதைக் கொடுத்துதான் ஆக வேண்டும். அதை மறுக்க முடியாது.

ஆனால், நான் மிக முக்கியமானதாக நினைப்பது அரசியல் பிரதிநிதித்துவம். யாரோ ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிட்டால் அது பிரதிநிதித்துவம் ஆகாது. நான் சொல்வது, கட்சித் தலைவராக, முதலமைச்சராக ஆக்க வேண்டும். இதை பா.ஜ.கவால் மட்டும்தான் செய்ய முடியும்.

நாளை தமிழ்நாட்டில் ஒரு எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர் முதல்வராக வருகிறார் என்றால் அதை பா.ஜ.கவால் மட்டும்தான் செய்ய முடியும். பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். குடும்பப் பின்னணி தேவையில்லை. ||  - அண்ணாமலை

இதை பேச இங்கே எந்த முற்போக்கு சக்திகளுக்கு திராணியுள்ளது? எல்லோரும் திமுகவிற்கு ஒரு குடும்ப ஆளுகைக்கு ஓட்டு போடுங்கள் என்பீர்கள் அதானே?பாஜக சமூகநீதியை வெறும் அரசியலுக்கோ,வெற்றிக்கோ பேசவில்லை.சமூக ஒற்றுமையை உருவாக்க செயல்படுத்தி வருகிறது.உண்மையான சமூகநீதியை தமிழகத்திலும் எதிர்காலத்தில் நிலைநாட்டும்.

என முறையான பதிலடியை கொடுத்துள்ளார் சுந்தர ராஜ சோழன்.

More Watch Videos