தமிழகத்தில் தாமரைமலரவே மலராது என வசனம் பேசியவர்கள் முகத்தில் கரியை பூசும் அளவிற்கு 300 அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது பாஜக, இந்த சூழலில் தமிழகத்தில் பாஜக ஒரு போதும் ஆட்சி செய்ய முடியாது என தெரிவித்த ராகுல் காந்தியின் வாய் முகுர்த்தம் இப்போது 300 மேற்பட்ட நகராட்சி இடங்களை பாஜக வெற்றிபெற காரணமாக அமைந்திருப்பதாக அக்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க., தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான வார்டுகளின் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், தமிழகம் முழுவதும் 308 வார்டுகளில் பா.ஜ.க. வெற்றி வாகை சூடி உள்ளது. இதில் 22 மாநகராட்சி வார்டுகள் அடங்கும்.தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக மாநகராட்சியில் பா.ஜ.க. அதிக வார்டுகளை கைப்பற்றி உள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி மாநகராட்சியில் அதிகபட்சமாக 11 வார்டுகளை பிடித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் 2 வார்டுகளிலும், சென்னை, கடலூர், காஞ்சீபுரம், ஓசூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, வேலூர் ஆகிய மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இவர்களில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளில் பா.ஜ.க. கால் பதித்துள்ளது. இது, தமிழக பா.ஜ.க. தலைவர்கள், தொண்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது பா.ஜ.க. 4 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நகராட்சியை பொறுத்தமட்டில் 56 வார்டுகளை பிடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 வார்டுகளையும், தென்காசி மாவட்டத்தில் 12 வார்டுகளையும், தேனி மாவட்டத்தில் 4 வார்டுகளையும், ராமநாதபுரம், திருப்பூர் மாவட்டத்தில் தலா 3 வார்டுகளையும், ஈரோடு மாவட்டத்தில் 2 வார்டுகளையும், கரூர், கிருஷ்ணகிரி, கோவை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, நாமக்கல், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வார்டுகளையும் கைப்பற்றி உள்ளது.
பேரூராட்சியை பொறுத்தமட்டில் 230 வார்டுகளை பிடித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 168 இடங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கைப்பற்றி உள்ளது.தனித்து போட்டியிட்ட இந்த தேர்தலில் பா.ஜ.க. 308 வார்டுகளில் வெற்றி வாகை சூடி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் கால் பதித்திருப்பது பா.ஜ.க. தொண்டர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது இதனை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் தாமரை மலராது என கூறிய நபர்களை கிண்டல் செய்யும் விதமாக முன்னூறு தாமரை மொட்டுக்களே வந்து மூதேவி தலையில் கொட்டுங்களே என பாடலே போட்டு தரமான சம்பவம் செய்துள்ளனர் பாஜகவினர்.
வைரலாகும் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.