
பிரபல காமெடி நடிகர் வடிவேலு அவர்களின் மகன் சுப்பிரமணி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பல்வேறு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து இருக்கின்றார்.
அப்போது, தனக்கு நடிப்பில் ஆர்வம் இருக்கிறது. சென்னை கூத்துப்பட்டறையில் சேர்ந்து அதற்கான பயிற்சி எடுத்து வந்தேன். எனக்கு முறையான வழி நடத்தல் இருந்தால் எளிதாக வாழ்க்கையில் மேலே வந்து விடுவேன். தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க விருப்பம் இருக்கிறது, என் அப்பாவோடு படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தால் நடிப்பேன், எனக்கு பிடித்த நடிகர் விவேக் விஜய் மற்ற நடிகர்களும் ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்து இருக்கின்றார்.
இவருக்கு மிமிக்கிரி செய்யும் திறமையும் இருக்கின்றது. கிருபானந்தவாரியார் போன்று மிக அழகாக பேசி உள்ளார். இவருக்கும் முருகரை வணங்க பிடிக்கும் என்பதால் கிருபானந்த வாரியார் மீது அதிக பற்று கொண்டு, அவர் போலவே பேசி அசத்துகிறார். இதை எல்லாம் பேசி முடித்து விட்டு தனக்கு வாழ்க்கையில் சேவை செய்ய வேண்டும் என்பது தான் லட்சியம், ஏற்கனவே சேவையில் ஈடுபட்டு இருக்கிறேன், சிறிய வயது முதலே சேவை செய்து வருகிறேன், குறிப்பாக ஆர்எஸ்எஸ் போன்று சேவை செய்ய எனக்கு மிகுந்த விருப்பம் என தெரிவித்து இருக்கின்றார்.
எப்போதும் எனக்கு ஆர்எஸ்எஸ் பிடிக்கும். ஆர்எஸ்எஸ் நண்பர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களை போன்றே சேவை செய்ய உள்ளேன் என தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கின்றார் நடிகர் வடிவேலின் மகன் சுப்பிரமணி. அரசியலைப் பொறுத்தவரையில் ஆர்எஸ்எஸ் என்றால் எதிர்க்கட்சிகள் வேறுவிதமாக எடுத்துரைப்பதும், பிராக்டிகலாக ஆர்எஸ்எஸ் பற்றி உணர்ந்தவர்கள் இவ்வாறு முழுமனதாக ஏற்றுக்கொள்வதும், RSS பற்றி மக்கள் உணர்ந்துக்கொள்ள நடிகர் வடிவேல் மகன் சொல்வதை வைத்து தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
More watch videos

 
                                             
                                             
                                            