Tamilnadu

அரசு பணிகளில் இந்துக்களை ஒதுக்கும் ஸ்டாலின் அரசு... எச்.ராஜாவிடம் கதறிய அதிகாரிகள்!

H.raja and stallin
H.raja and stallin

கர்நாடகாவில் பள்ளிக்கு வரும் அனைத்து சிறுவர்களும் ஒரே மாதிரியாக சீருடை அணிய வேண்டும் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அரசியல் காரணங்களுக்காக மடைமாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் தனி குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. 


இந்திய முழுவதும் அரசியல் ஆக்கப்பட்டுள்ள இந்த விவகாரம் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் விளக்கமளித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா பிரபல யூ-டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், பாரத தாய்க்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதனை பொறுமையாக பார்த்துக்கொண்டு இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் மதமாற்றம் இந்தியாவை சீரழித்து வருவதற்குள், இந்துக்கள் அனைவரும் சிறுபான்மையினர் ஆக்கப்படுவதற்குள் இந்த தேசத்தை பிரிக்காமல் பார்த்துக்கொள்வது நமது கடமை என வலியுறுத்தியுள்ளார். 

மேலும் மதமாற்றம் செய்யமாட்டோம் என கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மத தலைவர்கள் அறிவிக்க வேண்டும் என்றும், மதமாற்றம் செய்வது எங்களுடைய மதத்திற்கு விரோதமானது என இரண்டு மத தலைவர்களையும் அறிவிக்க சொல்ல முடியுமா? என சவால் விட்டுள்ளார். மதமாற்றம் தேசிய அபாயம், இந்துக்கள் சிறுபான்மையான பகுதி என்ற ஒன்று இந்தியாவில் இல்லாதது நல்லது. 

திமுக அரசு பதவிக்கு வந்ததும் அதிக அளவிலான கிறிஸ்துவர்களை முக்கிய பொறுப்புகளில் அமரவைத்துள்ளது. அரசு பணிகளில் இந்துக்களை ஒதுக்கும் வேலையை திமுக செய்துவருகிறது. கோவையில் உள்ள அதிகாரிகள் தனக்கு அளித்த தகவலின் படி, பாஜகவிற்கு ஆதரவு பெருகிவருவதால், அந்த மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென திமுக திட்டம் திட்டியுள்ளது. இதற்காக பல கிறிஸ்துவ அதிகாரிகள் கடந்த 6 மாதமாக பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

More watch videos