Politics

திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கை எடுக்கபோவது இவர்கள் மீது தானாம்..!

திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கை எடுக்கபோவது இவர்கள் மீது தானாம்..!
திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கை எடுக்கபோவது இவர்கள் மீது தானாம்..!

தமிழக சட்டசபை போது தேர்தல் முடிவுகள் வருகின்ற மே 2 அன்று வெளியாக இருக்கின்றன, அன்றைய தினமே, பாண்டிச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில தேர்தல் முடிவுகளும் வெளியாக இருக்கின்றன.


இந்தியா முழுவதும் மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களின் முடிவுகளே அதிகம் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது, மேற்கு வங்கத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் அதிமுக திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது, இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழக அரசியலில் நிலைக்க முடியும் என்ற நிலையில் திமுக இருப்பதால் இந்த தேர்தல் திமுகவிற்கு வாழ்வா? சாவா? பிரச்சனையை கொடுத்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை திமுக தலைமை எடுத்துள்ளது, ஸ்டாலின் மருமகன் சபரீசன் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வுகளை செய்து முடித்திருக்கிறார், இதில் திமுகவிற்கு சாதகமான சூழல் இருப்பதை ஒட்டி, இப்போதே திமுக தலைமை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

அதில் அமைச்சர் பதவி தொடங்கி சபாநாயகர், தலைமை செயலாளர், காவல்துறை பொறுப்புகள் என அனைத்தையும் லிஸ்ட் எடுத்து தாயார் செய்துவிட்டார்களாம், மேலும் திமுகவிற்கு குடைச்சல் கொடுத்த பல்வேறு அரசியல்வாதிகள், ஊடகத்துறையை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீதுள்ள குற்ற வழக்குகளை காரணம்காட்டி நடவடிக்கை எடுக்க திமுகவின் முக்கிய இரண்டாவது அதிகாரமாக செயல்படும் தலைமை முடிவு செய்துள்ளதாம்.

அதன்படி அமைச்சர்கள் வேலுமணி,  ராஜேந்திரபாலாஜி, சிவி. சண்முகம், முன்னாள் உளவுத்துறை தலைவர்கள்  இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம், இவர்கள் தவிர சமூக வலைத்தளங்களில் திமுகவிற்கு பெரும் சாவலாக இருக்கும் மூவர் மீது நடவடிக்கை எடுக்கவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்.

இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையாக வேண்டும் என்றால் முதலில் தேர்தலில் திமுக வெற்றி பெறவேண்டும், ஒருவேலை திமுக வெற்றி பெற்றால் கூட மத்தியில் பாஜக அசுர பலத்துடன் இருப்பதால் திமுக வெற்றி பெற்றாலும் அதனால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என அதிமுக அமைச்சர்கள் நம்புகிறார்களாம்.

மேலும் சமூகவலைத்தளத்தில் திமுகவிற்கு எதிராக செயல்படும் குறிப்பிட்ட நபர்கள் மீது திமுக நடவடிக்கை எடுத்தால், போராட்டம் உருவாகலாம் என்பதால் எளிதில் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என கூறப்படுகிறது.