தமிழக சட்டமன்ற பொது தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 நடைபெறவுள்ளது, இந்த நிலையில் பல்வேறு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், வார பத்திரிகைகள், இவை தவிர்த்து தனியார் நிறுவனங்கள் என தினமும் கருத்து கணிப்பை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் அவற்றில் எது உண்மை எது தவறியது என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான் தெரியவரும், இதுவரை தமிழக தேர்தல் நிலவரம் குறித்து இதற்கு முன்னர் தமிழக ஊடகங்கள் கணித்த கணிப்புகள் எதுவுமே சரியாக அமைந்தது இல்லை, இந்நிலையில் 24 air ads நிறுவனம் 234 தொகுதிகளில் நடத்திய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகளை இறுதியாக அறிவித்துள்ளது.
அதன்படி 234 நான்கு தொகுதிகளில் திமுக கூட்டணி 133 இடங்கள் வெல்லும் எனவும் அதிமுக கூட்டணி 70 இடங்களில் வெல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளது 31 இடங்கள் இழுபரியாக இருக்கும் எனவும் அந்நிறுவனம் கணித்துள்ளது, பாஜக 5-7 இடங்களிலும் பாமக 6-9 இடங்களிலும் காங்கிரஸ் 7-11 இடங்களில் வெல்லும் எனவும் கம்யூனிஸ்ட்கள் தலா மூன்று இடங்களிலும் விசிக 2 இடங்களில் வெற்றி பெரும் எனவும் அந்த நிறுவனம் கணித்துள்ளது.
பாஜக கடந்த தேர்தலை காட்டிலும் பல்வேறு மடங்கு வளர்ந்து இருப்பதாகவும் பாஜக வாக்கு வங்கி சராசரியாக 11% அளவிற்கு வளர்ந்து இருப்பதாக 24 airads நிறுவனம் குறிப்பிட்டுள்ளது, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்குகள் குறைந்துள்ளன எனவும் திமுக கூட்டணி பலம் காரணமாக இக்கட்சிகள் வெற்றி பெறுவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமமுக தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை பிரிக்கும் ஆனால் அந்த கட்சி வெற்றி பெறாது எனவும், அமமுக பிரிக்க கூடிய வாக்குகள், திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது, அமமுக, தேமுதிக, மக்கள் நீதிமய்யம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களை பெறாது எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆ.ராசாவின் பேச்சு கொங்கு மண்டலத்தில் எதிரொலிக்கிறது அவை வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தினால் திமுக 20 சீட்டுகளை இழக்க நேரிடும் எனவும் 24airads நிறுவனம் கணித்துள்ளது.