Tamilnadu

தைரியம் இருந்தால் என் மீது வழக்கு பதியுங்கள் அவர்களை விட்டு விடுங்கள் அண்ணாமலை எச்சரிக்கை!

annamalai2
annamalai2

பிரதமர் நிகழ்ச்சிக்கு கோவிலில் அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கிய அரசின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 


இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை தெரிவித்ததாவது: மழை வெள்ள பாதிப்பு காரணமாக தமிழக அரசு விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதி கொடுப்பதாக முதல்வர் கூறியுள்ளார் . ஆனால், எதிர்கட்சித்தலைவராக இருந்தபோது ஏற்பட்ட நிவர் புயலின்போது ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக முதல்வரின் மழை வெள்ள பாதிப்பு நிகழ்ச்சியினை ஒரு டூரிஸ்ட் பேக்கேஜ் மாதிரி செய்கின்றனர். மழை வெள்ள பாதிப்பு பார்வையிடச் செல்லும் முதல்வர் விவசாய நிலத்தில் அழுகி கிடக்கும் பயிர்களை கையில் எடுத்து பார்த்தால் தான் விவசாயிகளின் வேதனை புரியும்.

ஸ்ரீரங்கம் கோயிலில் கருத்தியல் மண்டபத்தில் அமர்ந்து இன்னொருவர் சொற்பொழிவை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பானது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது சரியல்ல, தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரப்படும்.

வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும். அதேபோல், வரும் வெள்ளிக்கிழமை மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிவாரண நிதி வழங்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

பிரதமர் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் தமிழக அரசை வலியுறுத்திய நிலையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் அழுத்தமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்ணாமலை பேட்டி அளித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.