Cinema

பார்வதிக்கு பின்பு எப்படியும் அந்த பணம் மிஷினருக்கு போக போகிறது? "தகவலை பகிர்ந்து" கவிஞர் சுதே கண்ணன் பாய்ச்சல்!

suriya jaibheem
suriya jaibheem

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ள நிலையில் விமர்சன ரீதியாக கடும் எதிர்வினைகளை சந்தித்து வருகிறது, பாமக, வன்னியர் அமைப்புகள் ஒருபுறம் கடும் எதிப்புகளை பதிவு செய்துள்ள நிலையில் தற்போது குறவர் சமுதாய அமைப்புகளும் நடிகர் சூர்யா வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


இப்படி தினமும் ஜெய்பீம் விவகாரம் கடும் சர்ச்சையை உண்டாக்க சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இந்த சூழலில் கவிஞர் சுதே கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் நடிகர் சூர்யாவின் சமீபத்திய செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அது பின்வருமாறு :-

சமூகத்தில் தன்னை ஒரு அறிவுஜீவியாக காட்டிக் கொள்ள ஆசைப்படும் அதற்குரிய எந்த தகுதியும் இல்லாத  நடிகர் சூர்யா தற்போது  நக்சல்களிளிடம் சிக்கி உள்ளார், அவர்களின் பேச்சுக்கு வாய் அசைப்பது.. அவர்களின் அறிக்கைகளுக்கு கையெழுத்திடுவது என்று அவர் தன்னை ஒரு சமூகப் போராளியாக ஆசிய செகுவாராவாக உருவகம் செய்து   கற்பனையில் வாழும் மனச்சிதைவு நோயில் பாதிக்கப்பட்டிருக்கலாம் .

என்னைப் பொறுத்தவரை நடிகர் சூரியா ஒரு முரட்டு முட்டாள் அவ்வளவுதான், நான் சொல்வது தவறு என்றால் நடிகர் சூர்யா ஏதேனும் ஒரு டிவி நேரலை நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டே உடன் ஒரு மணி நேரம் விவாதிக்கட்டும் தெரிந்துவிடும்.

அது ஏன் இடதுசாரி மிஷினரி ஊடகவியலாளர்கள்  தூக்கிப் பிடிக்கிற கௌசல்யா சங்கர் முதல் நடிகர் சூர்யா வரை நேரலையில் விவாதங்களில் பேசுவதே இல்லை .. மனிதாபிமானம் சொட்டச்சொட்ட அறிக்கை வெளியிட முடிகிற இவர்களால் ஏன் ஒரு நேரலையில் பேச முடிவதில்லை .. ஒரு தேசிய சிந்தனையுள்ள ஊடகவியலாளன் கேள்விக்கு இவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை .

தாங்கள் இடதுசாரி மிஷனரி நகர்ப்புற நக்சல்களின் முரட்டு அடிமைகள் என்பது ஏன் இவர்களுக்கு புரிவதில்லை, தற்போது பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை ஆவணங்கள் வழங்கியதில் கூட மெகா விளம்பர மோசடி இருப்பதாகவே என் பார்வைக்கு படுகிறது .

அதாவது 15 இலட்ச ரூபாய் வைப்புத் தொகையின் வட்டி மட்டுமே பார்வதி அம்மாளுக்கு வழங்கப்படும்,  அதாவது சூர்யாவும் ஜெய்பீம் படக்குழுவும் கோடிகோடியாக சம்பாதிக்க உதவிய கதையின் நிஜ நாயகி போலீஸ் சித்திரவதைக்கு கணவனை பறிகொடுத்த பார்வதி அம்மாளுக்கு   மாதம் 9,000 அல்லது 19,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.

நான் நினைத்திருப்பது சரியென்றால் பார்வதி அம்மாள் மறைவிற்குப் பிறகு அந்தப் பணம் இடதுசாரி நகர்ப்புற நக்சல் இயக்கங்களுக்கோ அல்லது பழங்குடியின மக்களை மதம் மாற்றும் மிஷனரி என்ஜிஓக்களுகோ அந்தப் பணம் சென்று சேரும் வகையில் வைப்புநிதி வரையறுக்கப்பட்டிருக்கும்.

நக்சல் பாம்புகளுக்கு பாலூட்டும் நடிகர் சூர்யா அறிவு குருடராக இருப்பதால் இடதுசாரி மிஷனரி ஊடகங்கள் அவரை கண்மூடித்தனமாக  ஆராதனை செய்கின்றன என மிகவும் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார் கவிஞர் சுதே கண்ணன்.