நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், காட்சி அமைக்கப்பட்ட விதமாகவும் மிக பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது என அப்படக்குழு கொண்டாட்டத்தில் ஈடுபட காத்திருந்த வேலையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
திரைப்படத்தில் திட்டமிட்டு வன்னியர்களை தவறாக உருவகம் செய்தது ஏன் என பல்வேறு வன்னிய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன, இந்த சூழலில் நடிகர் சூர்யா குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் பல்வேறு அமைப்புகள் சூர்யா குடும்பத்தினர் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சரத்குமார் முன்பு நடிகர் சிவகுமார் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசும் விடியோவை பாமகவினர் பகிர்ந்து வருகின்றனர், வைரலாகும் அந்த வீடியோவில் சரத் குமார் மிகவும் ஆவேசமாக நடிகர் சிவகுமாரை விமர்சனம் செய்கிறார், என் மனைவி ராதிகா பணத்தை நான் நடித்தே காலி செய்கிறேன் என சிவகுமார் கேட்டு i இருக்கிறார், சிவகுமார் நாவை அடக்கி பேசு நான் அப்பேர் பட்டவனா.
இந்த கேள்வியை ஆம்பளையாக இருந்தால் நீ என்னிடம் கேட்டு இருக்கவேண்டும் என ஆவேசமாக பேச அரங்கில் விசில் பறக்கிறது, பின்னால் இருந்தவர்களும் கை தட்டுகின்றனர் , இந்த வீடியோவை தற்போது பகிர்ந்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுதான் சிவகுமாரின் உண்மையான சுயரூபம் எனவும் பலர் விமர்சனம் செய்கின்றனர்.
இந்த சூழலில் சரத் குமார் சிவகுமார் குறித்து விமர்சனம் செய்யும் சூழலில் அருகே இருந்த அனைவரும் ரிஆக்சன் கொடுத்த நிலையிலும் அருகே இருந்த நீலிமா ராணி (நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ) எந்த வித ரிஆக்சனும் இல்லாமல் இருந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர், தற்போது ஜெய்பீம் விவாகரம் உச்சக்கட்ட சர்ச்சையில் சிக்கிய நிலையில் பழைய வீடியோகள் என பலவற்றையும் பகிர்ந்து சூர்யா தரப்பு அன்புமணியையும், அன்புமணி தரப்பு சூர்யா தரப்பையும் கடுமையாக விமர்சனம் செய்வது தொடர் கதையாக மாறியுள்ளது.