தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, பொது தேர்தல் இடைத்தேர்தல் என எதுவுமே அருகில் இல்லாத நேரத்திலும் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, இந்த சூழலில்
அரசியலில் இரண்டு முக்கிய விவகாரங்கள் பெரும் பேசு பொருளாக மாறியது, ஒன்று AR ரஹ்மானின் மொழி பற்றிய ட்விட் மற்றொன்று இளையராஜா பிரதமர் மோடி குறித்து குறித்து புத்தகம் ஒன்றில் எழுதிய முன்னுரை.
இளையராஜா பிரதமர் மோடியின் திட்டங்களை அம்பேத்கர் உடன் ஒப்பிட்டு தனது கருத்தை தெரிவித்து இருந்தார், இதற்கு தமிழகத்தில் சிலர் எதிர்ப்பையும் சிலர் இளையராஜாவின் தனிப்பட்ட உரிமை என ஆதரவையும் தெரிவித்தனர், இது ஒருபுறம் என்றால் இளையராஜாவை விமர்சனம் செய்பவர்களுக்கு தனது மொழியில் பதிலடி கொடுத்துள்ளார் இளையராஜா.
தளபதி படத்தில் வரும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலில் வரும் “நான் உன்னை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் என்ற வரிகளை பாடும் அவர் கூடுதலாக, “பாடுவேன் உனக்காகவே... இந்த நாள் நன்னாள் என்று பாடு. என்னதான் இன்னும் உண்டு கூறு” என்ற வரிகளையும் சேர்த்து பாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இளைய ராஜா இந்த பாடலை பாட முக்கிய காரணம் இருவர் என்ற தகவல் கூறப்படுகிறது ஒன்று பிரதமர் மோடி தன்னை பற்றிய இளையராஜாவின் கருத்திற்கு நன்றி தெரிவித்து இளையராஜாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார், மற்றொன்று நடிகர் ரஜினிகாந்த் இளையராஜாவை தொடர்புகொண்டு இளையராஜாவின் மோடி அம்பேத்கர் குறித்து பேசியுள்ளாராம்.
இப்படி ஒரே நாளில் அரசியலில் உச்ச பட்ச அதிகாரத்தில் இருக்கும் பிரதமரும், சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியும் தொடர்பு கொண்டு இளையராஜாவிடம் பேசியதால் அந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள் என இசைஞானி இளையராஜா பாடலே பாடி தனது ஸ்டைலில் வெளியிட்டுள்ளராம்.
இளையராஜாவை விமர்சனம் செய்தவர்களுக்கு தனது பாணியில் பாடல் மூலம் பதிலடி கொடுத்துள்ளதால் இந்த வரி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், இளையராஜா ராஜா பாடிய பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நான் உன்னை நீங்க மாட்டேன் .... !!
— Kavita Senthil Kumar (@kavita_senthil) April 21, 2022
நீங்கினால் தூங்க மாட்டேன் ----- இசைஞானி பாட்டு பாடி ட்வீட் 😂
(தலைக்கு சேட்டைய பாத்தீங்களா ) pic.twitter.com/LxdKGXObMI