Tamilnadu

எந்த கவர்னரும் எடுக்காத செயலை செய்துவரும் ஆர்.என்.ரவி பிரபல எழுத்தாளர் சுட்டி காட்டிய முக்கிய தகவல்!

rnravi
rnravi

தமிழகத்தின் ஆளுநர் ஆர் என் ரவி தமிழகத்தில் இதற்கு முன்னர் இருந்த எந்த கவர்னரும் செய்யாத செயல்களை செய்து கொண்டு இருப்பதாக பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் குறிப்பிட்டுள்ளார், இது குறித்து அவர் குறிப்பிட்ட முக்கிய தகவல் பின்வருமாறு :- இதுவரை இருந்த கவர்னர்களில் இருந்து முழுக்க வேறுபடுகின்றார் இன்றைய தமிழக மாகாண கவர்ணர் ரவி, தமிழக மாகாணத்தில் இதுவரை எத்தனையோ கவர்ணர்கள் இருந்தாலும் தென் முனையில் அதிக கவனம் செலுத்தியதில்லை முதல் கவர்னராக தூத்துகுடி வந்து நெல்லை வந்து அங்கே பல முக்கிய இடங்களை பார்வையிட்ட அவர் நெல்லை பல்கலைகழகத்திற்கும் வந்தார்.


நெல்லை பல்கலைகழகத்தில் ஒவ்வொரு துறையாக சுற்றி பார்த்த அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார், மாணவர்களும் ஆசிரியர்களும் மனம் நெகிழ்ந்திருகின்றனர் இது புதிது, தமிழக மாகாணத்துக்கும் அதன் 73 ஆண்டுகால வரலாற்றுக்கும் இது மிக புதிது இன்று மதுரை செல்லும் கவர்ணர் மீனாட்சி அம்மன் ஆலய தரிசனம் முடிந்ததும் காமராஜர் பல்கலைகழக விழாவில் பங்குபெறுகின்றார், மிக தீவிரமான சுற்றுபயணங்களிலும் களபணிகளிலும் இறங்கியிருக்கின்றார் அவர் பணி தமிழ் மாகாணத்தில் சிறக்கட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது, விரைவில் இது குறித்து மிக முக்கிய பல திருப்பங்கள் உண்டாகலாம் என்றும் கூறப்படுகிறது.