சமூக வலைத்தளத்தில் நேற்று முதல் அதிகம் தேடப்படும் அல்லது கேட்கப்படும் கேள்வி யார் அந்த அமைச்சர் யார் அந்த பெண்? இந்த கேள்விகள் மட்டும்தான் இணையத்தை தற்போது ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. எங்கு பார்த்தாலும் நெட்டிசன்கள் புள்ளி வைத்து காத்திருக்கும் மீம்ஸ்களே அதிகம் வலம் வருகின்றன.
உண்மை என்ன? :- நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஆளும் கட்சியை சேர்ந்த பெண் பிரபலம் ஒருவருடன் இருக்கும் வீடியோ விரைவில் வெளியாகும் என ட்விட் போட்டு இருக்கிறார், இதனை பலரும் உண்மை என நம்பி யார் அந்த அமைச்சர் என தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
சிலர் தங்கள் மனம் போன போக்கில் பல அமைச்சர்கள் பெயரை பட்டியல் இட்டனர், ஆனால் இதில் ஒரு அமைச்சர் பெயர் மட்டுமே அதிகம் சிக்கியது பலரும் காலையில் இருந்தே வீடியோ வெளியானது என சொல்றாங்களே தவிர ஒருத்தனும் வீடியோவை கண்ணில் காட்ட மறுக்கிறார்கள் என கிண்டல் அடித்து வருகின்றனர். இந்த சூழலில் அப்படி ஒரு வீடியோ தற்போது வரை வெளியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.
எப்படி மோடி 15 லட்சம் ஒவ்வொருவருக்கும் தருவதாக வாக்குறுதி அளித்தார் என எதிர் கட்சிகள் பொய் செய்தியை திட்டமிட்டு பரப்பி இந்தி தெரியாத மக்களை ஏமாற்ற தொடங்கினரோ அதே டெக்னிக் மூலமாக வதந்தியை நெட்டிசன்கள் பரப்பி இருக்கின்றனர், வெளியாகத வீடியோவிற்கு கை கால் வைத்து அதில் அமைச்சர் ஒருவர் பெயரை இழுத்துவிட்டு மொத்தத்தில் இணையத்தில் ட்ரெண்டாக்கியும் விட்டனர். என்ன ட்ரெண்ட் என்றால் அமைச்சர் பெயரை கூகுளில் தட்டினால் அவர் பெயருடன் வீடியோ என்ற வார்த்தையும் சேர்ந்து வரும் அளவு பலரும் கூகுளில் தேடியுள்ளனர். மொத்தத்தில் வீடியோ வெளியானதாக ஒரு ட்விட்டை போட்டு மொத்த இணையத்தையும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர் நெட்டிசன்ஸ்.