தமிழகத்தை சேர்ந்த முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் AR.ரஹ்மான் இவர் பல்வேறு மொழிகளில் இசை அமைத்துள்ளார், இந்தி மொழிகளிலும் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக இசை அமைத்துள்ளார், பிறகு இந்தியில் மார்க்கெட் குறையவே தற்போது ஆல்பம் தயாரிக்கும் பணிகளிலும், இசை சம்பந்தமான தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
வழக்கமாக நடிகர்கள் உச்ச நிலையில் இருக்கும் காலத்தில் தீவிர அரசியலில் இறங்க மாட்டார்கள் அதுவே மார்க்கெட் முடிந்த சூழலில் தீவிரமாக அரசியலில் களம் இறங்குவார்கள் அதே போன்று சமீப காலமாக AR. ரஹ்மான் நேரடியாக அரசியல் பேசாமல் மறைமுகமாக ஏதேனும் ஒரு வகையில் அரசியல் முன்னெடுப்பை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் அன்னை என தோற்றத்தில் ஒருபுகைப்படத்தை பகிர்ந்தார் இது உள்துறை அமைச்சர் அமிட்ஷாவின் இந்தியை ஊக்குவிக்க வேண்டும் என்ற கருத்திற்கு பதிலடியாக AR. ரஹ்மான் இவ்வாறு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என தமிழக ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி வருகின்றன. ஆனால் நேரடியாக ரஹ்மான் இது வரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் மார்க்கெட் குறைந்து வருவதால் ரஹ்மான் அரசியல் கட்சியில் சேர்ந்து அரசியல்வாதியாக மாறலாம் என்று கூறப்படுகிறது, மேலும் மாநிலங்களவை உறுப்பினராக சென்றால் வேலை பளு இருக்காது, அதே நேரத்தில் ஏதேனும் பட வாய்ப்புகள் வந்தாலும் அதனையும் பயன்படுத்தி கொள்ளலாம் என ரஹ்மானுக்கு ஒரு தேர்தல் இடை தரகர் அறிவுரை வழங்கி இருப்பதாக பேசப்படுகிறது.
இதுகுறித்து ரஹ்மான் தரப்பு முழுமையாக விளக்கம் கொடுத்தால் மட்டுமே தெரியும் ரஹ்மான் பகிர்ந்த புகைப்படம் உள்துறை அமைச்சர் அமிட்ஷாவிற்கு எதிரான கருத்து என எப்படி தமிழக ஊடகங்கள் ஆதாரம் இல்லாமல் கூறியதோ? அதே போன்றே ரஹ்மான் அரசியல் கட்சியில் சேர போகிறார் என்பதும் உறுதி படுத்தாத தகவல் என்கின்றனர் கோடம்பாக்க வட்டாரங்கள்.
ஆனால் ரஹ்மானின் சமீபத்திய நடவடிக்கை, துபாயில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது அவ்வப்போது ஏதேனும் மறைமுக கருத்து என AR. ரஹ்மான் ஈடுபட்டு வருவது அவர் திமுகவில் சேர போகிறார் என்ற தகவலை முற்றிலும் மறுப்பதற்கு இல்லை.