நடிகர் விஜய்யின் உறவினரும் மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீடுகள் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய செய்திகள் வெளியான நிலையில் சீன நிறுவனத்துடன் இணைந்து வரி ஏய்ப்பு செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. திரைப்பட முன்னணி நடிகர் விஜய்யின் உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக அதிரடியாக நடத்தியுள்ளனர்.
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தை தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினரான இபிரிட்டோ ஏற்கனவே சில படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் உள்ளார் ஆனால் அவை பெரும்பாலும் லாபத்தை கொடுக்கவில்லை தனது இதர தொழில்களின் லாபத்தை சினிமாவில் முதலீடு செய்து லாபம் பார்ப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரிட்டோ தொழில் மூலம் வரும் வருமானத்திற்கு கணக்கு காட்ட திரைப்பட துறையை பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து இன்று (டிச.,22) வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள சேவியர் பிரிட்டோவின் வீடு மட்டுமல்லாமல் பெங்களூருவில் உள்ள அவரது அலுவலங்கள் அந்த அலுவலகத்தின் நிர்வாகிகள் வீடுகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகின்றன.
செல்போன் சந்தையில் முக்கிய அங்கம் வகிக்கும் சீன நிறுவனமான சியோமி, ஓப்போ நிறுவனங்களுக்கு சொந்தமான 25 இடங்களில் நேற்று முதல் வருமான வரி சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் இந்த சோதனை நடப்பதாக அறியமுடிகிறது. சேவியர் பிரிட்டோவிற்கு எப்படி முதலீடுகள் கிடைக்கின்றன வருமானத்தில் காட்ட பட்ட சொத்து மதிப்பிற்கும் மீதமுள்ள மதிப்பிற்கும் உள்ள பட்டியலை வருமான வரித்துறை கணக்கு பார்த்து வருவதாகவும், இதன் நீட்சியாக விரைவில் நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடைபெற்றாலும் ஆச்சர்ய பட ஒன்றும் இல்லை என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரங்கள்.