சிம்பு நடிப்பில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி, எஸ்ஏ சந்திரசேகர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் நடிகர் சிம்பு மட்டும் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எஸ்ஏ சந்திரசேகர் பேசியதாவது: காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை. முதலமைச்சர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படத்தில் வரும் மத அரசியல் காட்சி இந்தியாவையும், வாரிசு அரசியல் காட்சி தமிழகத்தையும் குறிக்கின்றது என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாநாடு பட வெற்றி விழாவில் சிம்பு பங்கேற்காதது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில் வாரிசு அரசியல் என SAC பேசியது ஆளும் திமுக தரப்பை அதிருப்திக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது, சந்திரசேகர் நேரடியாக உதயநிதியை மனதில் வைத்தே அவ்வாறு பேசியதாகவும் இதனால் ஆளும் திமுக கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் ஆளும் கட்சி வாட்டரங்கள் தெரிவிக்கின்றன இந்த சூழலில் நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படமான பீஸ்ட் பிரச்சனை இன்றி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாநாடு திரைப்படம் வெளியாவதில் ஆளும் கட்சியின் தலையீடு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு விஜய்யின் தந்தை ஆளும் கட்சி குறித்து பேசியதால் என்ன ஆபத்து வர போகிறது என்பதை இனி வரும் நாட்களில் தான் அறிந்து கொள்ளமுடியும் ஏற்கனவே விஜய் குருவி படத்தில் பல சிக்கல்களை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.
மத அரசியல் என பாஜகவை மறைமுகமாக சந்திரசேகர் பேசிய போதிலும் பாஜகவினர் அந்த விஷயத்தை பெரிதாக எடுத்து எந்த கருத்தும் இதுவரை கூறாதது குறிப்பிடத்தக்கது.