தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வளம் வந்து தற்போது தமிழ் சினிமாவின் உச்சகட்ட விமர்சகராக கருதப்படுபவர் பயில்வான் ரங்கநாதன்! தூத்துக்குடியில் தனது பள்ளி மற்றும் கல்லூரி முடித்த பயில்வான் பளு தூக்குவதில் ஆர்வம் காட்டியதால் தனது கல்லூரி படிப்பின் பொழுதே ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வந்துள்ளார் அதற்கு பிறகு இவர் மிஸ்டர் சென்னை பட்டத்தையும் பெற்றார். அதற்குப் பிறகு படங்களில் நடித்த பயில்வான் ரங்கநாதன் முந்தானை முடிச்சு படத்தில் வரும் வைத்தியர் வேடத்தில் நன்கு பிரபலமானார் அதற்கு பிறகு சுமார் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அப்படி இவர் நடித்த படங்கள் முழுவதுமே இவரது நடிப்பிற்கு மக்கள் வரவேற்பை கொடுத்துள்ளனர் ஆனால் சமீப காலமாக அவர் பேசி வருகின்ற ஒவ்வொரு பேச்சும் சினிமா வட்டாரத்தை மட்டுமின்றி மக்களையும் கடுப்படைய செய்து வருகிறது.
அதாவது தமிழ் திரைப்பட விமர்சகராக அறியப்படுகின்ற பயில்வான் ரங்கநாதன் கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் உள்ள நடிகை மற்றும் நடிகர்கள் குறித்து விமர்சிக்கும் வகையிலும் அவர்களது அந்தரங்க வாழ்க்கை குறித்த தகவலையும் பொது மேடையில் கூறி பல நடிகைகளின் எரிச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நடிகர்களை விட நடிகைகளை குறித்து அதிக விமர்சனத்தை முன்வைக்கும் ரங்கநாதன் முன்னணி நடிகர்களான ரேகா நாயர், ராதிக போன்றவர்களின் கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார் அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட நடிகர் விஷாலும் பயில்வான் ரங்கநாதன் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் ரேகா நாயர் உங்களை அடித்ததாக கூறுகிறார்களே என்று தொகுப்பாளனி ஒருவர் கேள்வி கேட்க அதற்கு, பயில்வான் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டார் அதற்கு தொகுப்பாளினியே அப்பொழுது நடிகை நடிகர்கள் குறித்து நீங்கள் பேசுவதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா என்று மறு கேள்வி கேட்டதற்கு அவர்களே மறைக்கவில்லை! உங்களுக்கு தேவை அவர்கள் குறித்த வீடியோக்களா அந்த வீடியோவை காட்ட வேண்டும் என்றால் தனியாக ரூமிற்கு வா என்று எல்லை மீறிய அவர் பேசியிருந்தார். அவரது அந்த பேச்சு மிகவும் விவாத பொருளாக மாறியது அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக நடிகர் விஜய் விக் வைத்திருக்கிறார் என்றும் நயன்தாராவிற்கு குழந்தையை தாங்கும் பலன் இல்லை என்றும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்து வந்தார் ரங்கநாதன்!
இப்படி தொடர்ச்சியாக நடிகைகளை குறித்து விமர்சித்து வந்த பயில்வான் ரங்கநாதனே வாய் அடைத்துப் போய் நிற்கும் வகையில் அவரது மகள் குறித்த பரபரப்பான தகவலை நடிகை ஷகிலா கூறியுள்ளார். அதாவது தனியார் தொலைக்காட்சி நடத்தும் பேட்டி ஒன்று கலந்துகொண்ட ஷகிலா, பயில்வான் ரங்கநாதனிடம் சினிமாவில் உள்ள நடிகைகளை குறித்து பேசும் உங்களுக்கு உங்களின் கடைசி மகள் யாரை காதலிக்கிறார் என்று தெரியுமா என அவர் கேட்க பதில்வான் ஒன்றும் பேச முடியாமல் அமைதியாக வாய் எடுத்துப் போய் நின்றார். அதோடு உங்கள் மகள் குறித்து எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் என்னிடம் கூறியுள்ளார், அதாவது உங்கள் மகள் இன்னொரு பெண்ணை காதலித்து வருகிறார் இதுவே உண்மை என்று ஷகீலா அடித்து பேசியது பயில்வானை திகைக்க வைத்தது! தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகி வருவதால் பல விமர்சகர்கள் மற்றும் நெடிசன்கள் பல நடிகைகளை குறித்து பேசய இவருக்கு தன் வீட்டின் நிலமை தெரியவில்லையா? இதுதான் கர்மா என்று பலவாறு விமர்சனம் செய்து வருகின்றனர்.