ஆளும்கட்சியான திமுக எம்பி செந்தில்குமார் சமீபத்தில் தனியார் யூடூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி கடும் விமர்சனங்களை சொந்த கட்சியினரிடம் இருந்தே எதிர்கொண்டுவருகிறது , திமுகவை சேர்ந்த தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் சமீபத்தில் நடந்த சாட்டை துரைமுருகன் கைது ,உள்ளாட்சி தேர்தல் வெற்றி சமூகவலைத்தளத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து பேட்டி கொடுத்து இருந்தார் .
இந்த பேட்டியில் சாட்டை துரைமுருகன் அநாகரிகமாக பேசியதால் அவரை ஸ்கெட்ச் போட்டு பேசவைத்து இப்போது கைது செய்ய வைத்து இருக்கிறேன் எனவும் பேசினார் ,இதற்கு பதில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் துரைமுருகன் ஒரு ஆத்தாள் அப்பனுக்கு என பேசியதால்தான் அவரை கைது செய்துள்ளோம் என கூறுகிறார்கள் ,இதுபோல் திமுகவினர் பேசினாலும் செந்தில்குமார் குரல் எழுப்புவாரா ? என கேட்க நிச்சயம் கேட்பேன் என சொன்னார் செந்தில் .
கடந்த ஆட்சியில் ஒரு அப்பனுக்கு பிறந்து இருந்தால் என் மீது வழக்கு போடு என சொன்னவர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க செந்தில் கூறுவாரா ? என கேட்க மழுப்பினார் பாருங்க இந்த பேட்டியை பார்த்த அனைவருமே ஒரு நிமிடம் சிரித்து விடுவார்கள் ,நா துரைமுருகன் மீது கேஸ் கொடுத்தது வேற ஒரு காரணத்திற்காக அசிங்கமாக பேசியதால் அல்ல என ஒரேபோடாக போட்டார் .
H ராஜாவை இப்போது கைது செய்தால் வெளியில் வந்துவிடுவார் இப்போது பெரிய ஸ்கெட்ச் போட்டு வருகிறேன் என செந்தில் சொல்ல பேட்டி எடுத்தவர் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தது இது பேட்டியா இல்லை உளறலா? என கேட்க தோன்றும் வகையில் அமைந்தது இதையெல்லாம் தாண்டி உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுக்கப்பட்டதா ? என்ற கேள்விக்கு செந்தில் கொடுத்த பதில்தான் டாப் .
இதுவரை மேலோட்டமாக சிரித்த பேட்டி எடுத்தவர் வெளிப்படையாக செந்தில் கொடுத்த பதிலால் சிரித்தேவிட்டார் பணம் கொடுப்பது கட்சியல்ல வேட்பாளர்கள்தான் என செந்தில் சொல்ல அப்போது திமுக வேட்பாளர்கள் கொடுத்தார்களா ? என விடாமல் பத்திரிகையாளர் துணை கேள்வி எழுப்ப சரண்டர் ஆகிவிட்டார் செந்தில் . இப்போது இந்த பேட்டியை பார்த்துவிட்டு பாஜக பாமகவினர் கலாய்க்க தொடங்க உங்களை யார் சார் பேட்டி கொடுக்க போக சொன்னா என வேதனையில் குமுறலை கொட்டிவருகின்றனர் திமுகவினர். பேட்டியை பார்க்க கிளிக் செய்யவும் .