Tamilnadu

யாரை கேட்டு இதை செய்தீர்கள் வெளு வெளுவென வெளுத்து எடுத்த ஆளும் தரப்பு? மொத்தமும் போச்சு!

maridhas and kishore
maridhas and kishore

தமிழக பாஜகவினர் மட்டுமல்ல எதிர்க்கட்சியை சேர்ந்த நபர்கள் அதிக அளவில் வரவேற்க கூடிய சம்பவம் நேற்று அரங்கேறியது நேற்று ஒரே நாளில் மாரிதாஸ், கிஷோர் கே சுவாமி,ஷிபின் என்ற இளைஞர் என மூவருக்கும் சாதகமான தீர்ப்பு வந்தது. இதில் கிஷோர் கைது செய்யப்பட்டு 6 மாதம் கடந்த நிலையில் அவர் மீது போடப்பட்ட அனைத்து வழக்கிலும் ஜாமின் கிடைத்தது குண்டாஸ் மட்டுமே நிலுவையில் இருந்த நிலையில் குண்டாசை நீதிமன்றம் நீக்கியுள்ளத்தால் கிஷோர் விடுதலை ஆகிறார், இது ஒருபுறம் என்றால் மாரிதாஸ் கிஷோர், ஷிபின் என மூவரும் ஒரே நாளில் விடுதலை ஆவது பாஜக மீது அதன் தொண்டர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது என்றால் ஆளும் தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறது.


மாரிதாஸ் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து அதன் மூலம் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க முக்கிய அமைச்சர் தலைமையில் சென்னையில் உள்ள ஊடகங்களை தவறாக பேசிய திமுக பிரமுகர் குழு செயல்பட தொடங்கியதாகவும் ஆனால் தற்போது அந்த குழுவின் சட்ட போராட்டம் தோல்வியில் முடிந்த காரணத்தால் திமுக தலைமை கடுமையாக சட்ட போராட்டம் நடத்திய குழுவை சாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒரு பெட்டிசனை முறையாக தாக்கல் செய்ய முடியவில்லை, திமுகவினருக்கும் பிரிவினை வாதிகளுக்கும் இடையே மோதல் உண்டாகும் என புகாரில் போட்டால் வழக்கை ரத்து செய்யாமல் என்ன செய்வார்கள் என தலைமை கடுமையாக சாடியுள்ளது இதையடுத்து அந்த ஊடகத்தை தவறாக பேசிய பிரமுகர், மூன்று நாளில் எப்படி FIR ரத்து செய்கிறார்கள் என சந்தேகம் எழுப்பினார், அந்த பேட்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்தும் தவறாக விமர்சனம் செய்து இருக்கிறார்.

மேலும் மேலப்பாளையம் வழக்கு நிற்கும் என ஆளும் தரப்பிற்கு ஆறுதல் தெரிவித்து இருக்கிறார், ஆனால் நேற்று அந்த வழக்கும் போலி வழக்கு என நீதிமன்றம் ரத்து செய்துள்ள காரணத்தால் மாரிதாஸ் விடுதலை ஆவதில் சிக்கல் இல்லை என்பது தெளிவாகி இருக்கிறது இதனை அடுத்து இதுநாள் வரை பொறுமை காத்த ஆளும் தரப்பு நேரடியாக கால் செய்து கிழி கிழியென வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களை வெளுத்து எடுத்து விட்டதாம்.

கைது செய்கிறோம் சிறையில் அடைகிறோம் என செயல்பட்டு இப்போது வழக்கை தள்ளுபடி செய்யும் நிலைக்கு சென்று கொண்டு விட்டு இருக்கிறீர்கள் என கடுமையாக கொந்தளித்து இருக்கிறதாம் ஆளும் தரப்பு, இதற்கிடையே மாரிதாசிற்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர்கள் புலம்பி தீர்கிறார்கலாம்.

காசு கூட வாங்கமல் பல வழக்கறிஞர்கள் பாஜகவினர் கைது செய்யப்பட்டால் நீதிமன்றம் முன்பு வந்து நிற்கிறார்கள், போதாத குறைக்கு மத்திய அரசு அனைத்து அதிகாரத்தையும் செயல்படுத்துகிறது இது தவிர்த்து புகாரில் உண்மை இல்லாத போது என்ன செய்வது என புலம்பி கொண்டு இருக்கிறார்களாம்.