கோவை குசும்பு கேள்வி பட்டு இருப்பீங்க ஏன் பார்த்து இருப்பீங்க ஆனா தென்காசி குசும்பு பார்த்துருக்கீங்களா இதோ பாருங்கள் இப்படித்தான் டைட்டில் உடன் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் மழைநீர் தேங்கி இருக்கும் பகுதியில் நிருபர் ஒருவர் அங்கிருக்கும் குடியிருப்பு வாசியிடம் மைக்கை கொடுத்து அரசு நடவடிக்கை எப்படி இருக்கு என கேள்வி எழுப்பினார், அதற்கு பதில் அளித்த அந்த இளைஞர் மிகவும் சந்தோசமாக இருக்கோம் 50 ஆண்டு திராவிட ஆட்சியில் ஏரி,கண்மாய் எல்லாத்தையும் மூடியதால் இப்போது ரோட்டில் மற்றும் ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது.
கட்டிலுக்கு கீழே தண்ணி ஓடுகிறது அங்கேயே இருந்து அங்கேயே பல் விளக்கி கொள்கிறோம் இந்த வசதி யாருக்கு கிடைக்கும், இதை பாராட்ட வேண்டாமா என கலாய்த்து தள்ளுகிறார், உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது உண்மையா? அப்படி பேசியது உண்மையாக இருந்தால் எப்படி நமது ஆதரவு தொலைக்காட்சியே அரசை கிண்டல் செய்வது கூட தெரியாமல் ஒளிபரப்பலாம், உடனடியாக நீக்க வேண்டும் என கமெண்டில் கதறி வருகின்றனர்.
ஆனால் இன்னும் சில உடன் பிறப்புகளோ இது டப்பிங் என்று கமெண்ட் செய்து மனதை தேற்றி கொண்டு உள்ளனர், மொத்தத்தில் வைரலாகும் வீடியோ, தமிழகத்தை தாண்டி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மத்தியிலும் பிரபல மாகிவருகிறது.
வைரலாகும் அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இப்போது வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ள சேனலை தொடர்புகொண்டு உண்மை நிலவரம் என்ன என திமுகவினர் கேட்டு வருகிறார்கலாம்.