சிறுமி லாவண்யா உயிரிழந்த விவகாரம் தற்போது தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கட்டாய மத மாற்றம் செய்ய மாணவி தங்கியிருந்த செயிண்ட் மைக்கேல் மகளிர் விடுதி வார்டன் கட்டாயப்படுத்தியதாகவும், கழிவறை சுத்தம் செய்யவும் டார்ச்சர் செய்ததில் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று கடைசியில் உயிரிழந்தார் .
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் மாவட்ட எஸ்பி அளித்த பேட்டியில், மதமாற்றம் குறித்து எந்த வார்த்தையும் இல்லை என முதற்கட்ட விசாரணை மூலமாக தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டிருந்தார். அதேவேளையில் லாவண்யா கொடுத்த வாக்குமூலம் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் சில கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதிலாக, "தன்னை கொடுமை படுத்தியது, வேலை செய்ய துன்புறுத்தியது, விடுமுறை அளிக்காமல் இருந்தது, எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பது, எந்தப்பொருள் காணாமல் போனாலும் தான் எடுத்து விட்டேன் என திட்டுவது, விடுமுறை அளிக்காமல் வேலை வாங்குவது, இப்படி பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு இருக்கின்றார் என வாக்குமூலத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.
ஆனால் இங்கு உற்று நோக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உயிருக்கு போராடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லாவண்யாவின் வீடியோ வாக்கு மூல பதிவை பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் மதமாற்றம் குறித்து பேசியிருக்கிறார். அதேபோன்று மாணவியின் பெற்றோர்களும் செய்தியாளர் சந்திப்பின் போது .
"கடந்த இரண்டு வருடங்களாக மதமாற்றம் செய்ய சொன்னாங்க.. எவ்வளவு கட்டாயப்படுத்தியும் எங்களுக்கு அதில் விருப்பமில்லை. அதே வேளையில் பத்தாம் வகுப்பில் என் மகள் 489 மதிப்பெண் எடுத்து முதல் மாணவியாக இருப்பதால், தற்போது உள்ள கொரோனா கால கட்டத்தில் வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்றுவது என்பது இயலாத காரியமாக இருந்தது. எனவே இந்த ஒரு வருடம் படிக்க வைத்து விட்டால் முடிந்துவிடும் என நினைத்து அப்படியே விட்டுவிட்டோம், இப்போது அவள் இல்லவே இல்லை.. உயிரையே விட்டு விட்டாள் என அவருடைய பெற்றோர்கள் அழுது புலம்புகின்றனர்.
மேலும் எங்கள் குழந்தைக்கு நடந்த மாதிரி வேறு யாருக்கும் இந்த தமிழகத்திலும், இந்தியாவிலும் நடக்கவே கூடாது, எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர்.
More watch videos