உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது . இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.வீரர்கள் உறுதிமொழி ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொண்டனர்.700 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கியது. 300 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
களமிறங்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தலா ஒரு தங்ககாசு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் தேர்வு செய்யபட்ட சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்படவுள்ளது. அதேபோல் சிறந்த மாடு பிடி வீரருக்கு எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஐந்தாயிரத்திற்கும் குறையாமல் ஒவ்வொரு காளைக்கும் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக ஜல்லிக்கட்டு விழா கமிட்டிக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் எல்இடி டிவி, பீரோ, கட்டில் உள்ளிட்ட சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
பாதுகாப்பு பணியில் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சார்பில் காளை மாடுகள் களம் இறக்கப்பட்டன, தமிழக நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் சார்பிலும் மாடு களம் இறக்கப்பட்டது, இந்த காளை மாட்டினை வீரர்கள் இருவர் அடக்கினர் ஆனால் அது ஏற்று கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டது, இதை அடுத்து மாடு சிறிது நேரம் சுற்றி விளையாட மீண்டும் ஒருவர் மாட்டினை பிடித்தார், நீண்ட நேரமாக மாட்டினை அந்த திமிலை பிடித்து அடக்கிய பின்பும் மாடு பிடி மாடு என கமிட்டி சார்பில் அறிவிக்கவில்லை, இதனை பார்த்த பலரும் தற்போது வீடியோவை பகிர்ந்து கேள்வியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் அதான் அமைச்சர் PTR அவர்களின் மாடு என அறிவித்த பின்பும் பிடித்தால் எப்படி பரிசு கொடுப்பார்கள் என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர் அந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.