தனியார் பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி குறித்து தவறாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வண்ணம் நிகழ்ச்சி ஒளிபரப்பான நிலையில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன இந்த சூழலில் எழுத்தாளர் சுந்தரராஜா சோழன் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :-
ZEE ஒரு பொழுது போக்கு சேனல்.அதில் பணிபுரிபவர்களுக்கும், நிர்வாகத்திற்கும்,அதன் தலைமைக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடுள்ளது என்பதை மறுக்க முடியாது காரணம் வாக்களிக்கிறார்கள்..அதை விமர்சனம் செய்ய யாருக்கும் யோக்கியதை கிடையாது.
ஆனால் தொழிலில் நடுநிலை நிறுவனமாக தன்னை ZEE முன் வைக்கும் போது,அதன் நிகழ்ச்சிகள் அரசியல் சார்பற்று இருக்க வேண்டியது கட்டாயம்.பிரதமர் மோடி என்றில்லை,முதல்வர் ஸ்டாலின்,ராகுல்காந்தி,ராமதாஸ், சீமான்,திருமாவளவன் என யாரையுமே கேலி செய்தோ எதிராக நிறுத்தியோ ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்துவது தவறு..கண்டிக்கப்பட வேண்டிது..
கலைஞர் டிவி,சன்டிவி,ஜெயா டிவி,கேப்டன்,மக்கள் டிவி இவற்றை பற்றியெல்லாம் யாராவது கவலைப்படுகிறார்களா? அதுவும் தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாத குழந்தைகளிடம் நாட்டின் பிரதமரை பற்றி இழிவாக பேச வைப்பது மிகப்பெரிய குற்றம்.. இதைச் செய்துவிட்டு குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தி பின்னால் ஒளிவது தீவிரவாதத்தை விட அதிபயங்கர கருத்தியல்வாதம்...
அந்த நிறுவனமும்,இந்த நிகழ்ச்சியின் தலைமை பொறுப்பாளர்களும்,அந்த நிகழ்ச்சியின் நீதிபதிகள் என அனைவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லை என்றால் இது தவறான முன்னுதாரணமாக போய்விடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.