தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் வேண்டும் என்றே பிரதமருக்கு எதிராக கருத்துக்களை பரவ விட்டு குறிப்பாக குழந்தைகளை அதில் பயன்படுத்திய நபர்கள் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர், குறிப்பாக இந்த சம்பவத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளை அரசியல் ரீதியாக பேச அந்த நிகழ்ச்சியின் கன்டென்ட் ரைட்டர் அன்புடன் ஆதி என்ற நபர் ஊக்க படுத்தியதாக தெரிவதாக இன்று காலை நமது TNNEWS24- ல் தகவல்களை வெளியிட்டு இருந்தோம் அதில் அந்த ஆதி என்ற நபர் பிரதமரை இழிவு படுத்தும் விதத்தில் வெளியான வீடியோ காட்சியை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்ட பதிவிற்கு நன்றியும் தெரிவித்து இருந்தார்.
இதனை screen ஷாட் உள்ளிட்ட ஆதாரங்களுடன் TNNEWS24 குழு செய்தியாக மக்கள் மத்தியில் வெளியிட்டது, இந்த செய்தி இணையத்தில் படு வைரலாக பரவியது அவ்வளவுதான் பாக்கி அன்புடன் ஆதி என்ற நபர் முகநூலில் தனது கணக்கயே முடக்கிவிட்டு ஓட்டம் எடுத்துவிட்டார் தனது பழைய பதிவுகளை நீக்கம் செய்ய அந்த நபர் ஓட்டம் எடுத்து இருக்கலாம் அல்லது சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு பயந்து ஓட்டம் எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
எப்படி செய்தி ஊடகங்களில் இருந்து பலர் மாரிதாஸ் வீடியோ வெளியிட்ட பின்பு வெளியேற்ற பட்டார்களோ அதே போன்று பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனங்களில் இருந்தும் பலர் இனி வரும் காலங்களில் வெளியேற்ற படலாம் என கூறப்படுகிறது.
தங்கள் கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆயிரம் இடங்கள் இருக்கின்றது ஆனால் பொழுது போக்கு நிகழ்ச்சியில் குழந்தைகளை பகட காயாக மாற்றி பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த நபர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை பாயும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கின்றனர் அந்நிறுவன வட்டாரங்கள். பாஜகவினர் மட்டுமின்றி தேசியவாதிகள் போட்ட போடில் இப்போது சின்னத்திரை வட்டாரங்களே ஆடி போயுள்ளதாம்.