பிரதமர் மோடியின் தமிழக வருகையை திமுக எதிர்க்கபோவதில்லை எனவும் அவர் எங்கள் விருந்தினர் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார் இதற்கு பல தரப்பிலும் சந்தேகம் எழுந்தது, பாஜக எதிர்ப்பை மையமாக கொண்ட திமுக பிரதமர் மோடியை அழைத்து நிகழ்ச்சி நடத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஆர்.எஸ்.பாரதி “எங்கள் கட்சி எந்தவொரு தனிநபருக்கும் எதிரானது அல்ல. கொள்கைகளுக்கு மட்டுமே எதிரானது தமிழ்நாட்டின் கோரிக்கைளுக்கும், தேவைகளையும் பூர்த்தி செய்வதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதனால், ஜனவரி 12 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டவேண்டிய அவசியமில்லை. இப்போது நாங்கள் ஆளும் கட்சி. பிரதமர் மோடி தமிழக விருந்தினராக வருகை தருகிறார்” என தெரிவித்தார். இந்த சூழலில் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளை துணைக்கு அழைத்து கொண்டு பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருந்தனவாம், ஆனால் திமுக ஸ்ட்ரிட்டாக அதெல்லாம் வேண்டாம் என அழுத்தி தெரிவித்து விட்டதாம்.
ஏற்கனவே இந்தியவின் முதல் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் மர்மமான முறையில் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தில் இறந்தது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, இந்த நேரத்தில் பிரதமர் வருகையின் போது போராட்டம் ஆர்ப்பாட்டம் என நடந்தால் அதனை சமூக விரோத சக்திகள் தங்கள் லாபத்திற்கு பயன்படுத்தி கொள்ள முயலும் என்று உளவு துறை அறிக்கை கொடுத்துள்ளது.
மேலும் அப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் நிச்சயம் ஆளும் திமுகவிற்கு எதிராக முடியும் என்பதால் எந்தவித ஆர்ப்பாட்டமும் நடத்த கூடாது என முடிவு எடுத்து அதனை தங்கள் கூட்டணி கட்சிக்கும் சொல்லிவிட்டதாம் திமுக, பிரதமர் மோடி எதிர்ப்பில் இருந்து திடீர் என திமுக பின்வாங்க இதுதான் காரணமாம்.