Tamilnadu

வெளிப்படையாக தெரியாததுதான் மிச்சம் வெளுத்து எடுத்த ஆளுநர் பெட்டி பாம்பாக அடங்கிய ஆளும் கட்சி!

Stallin and rn ravi
Stallin and rn ravi

சிறை கைதிகள் விடுதலை மற்றும் தமிழ் புத்தாண்டு மாற்றம் ஆகியவை குறித்து ஆளும் அரசின் முடிவை ஆளுநர் ஏற்க மறுத்த நிலையில் மீண்டும் ஆளுநரை அணுகிய ஆளும் தரப்பை ஆளுநர் கடுமையாக சாடி இருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தமிழ் புத்தாண்டை சித்திரையில் இருந்து தை மாதமாக மாற்ற தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது இதை அடுத்து சட்ட திருத்தம் செய்ய ஆளுநரை அணுகிய போது ஏன் இப்போது புத்தாண்டு தினத்தை மாற்ற வேண்டும், அண்டை மாநிலங்கள் ஆந்திரா கேரளா கர்நாடகா எப்போதும் தங்கள் மாநில புத்தாண்டை மாற்ற விரும்பவில்லை ஏன் நீங்கள் இந்த முயற்சியை எடுக்கிறீர்கள் என வெளுத்து எடுத்து இருக்கிறார்.


இந்த சூழலில் தான் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்ட பையை மாற்றி தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என மாற்றி இருக்கிறது தமிழக அரசு, இது ஒருபுறம் என்றால் சிறை கைதிகள் விடுதலை விவாகரத்திலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை இந்த சூழலில் தான் கடும் எதிர்ப்பு கிளம்ப நிலைமையை சமாளிக்க குழு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது ஆளும் அரசு. இது குறித்து ஆளும் திமுக அரசு வெளியிட்ட அறிக்கையில்  ஆயுள் தண்டனைக் கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தண்டனையைக் குறைத்து முன்விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழுமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுடைய 113வது பிறந்தநாளை முன்னிட்டு. சிறையில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவரும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்வது குறித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, உரிய விரிவான வழிமுறைகள் வகுத்து அரசால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடித்தும், இதன்கீழ் பயன்பெற முடியாத ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைநோய்கள் உள்ள உடல் நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள் மற்றும் மாற்றுத் திறனாளி சிறைவாசிகள் (விடுதலைக்காக அவர்களால் உருவாக்கப்பட்டதல்லாத) ஆகியோர்களின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டும்.

இது குறித்தான மாண்பமை உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாகத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் இவர்களின் நிகழ்வுகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரிய பரிந்துரை வழங்க ஏதுவாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு என். ஆதிநாதன் அவர்களின் தலைமையின் கீழ் ஆறுபேர் அடங்கிய ஒரு குழு அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இக்குழுவில், மனநல மருத்துவ இயக்குநர். மருத்துவக் கல்வி இயக்குநர். சிறைத் துறைத் தலைமை நன்னடத்தை அலுவலர், உளவியலாளர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்குரைஞர் என ஐந்து உறுப்பினர்களும், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணைத் தலைவர் பதவி நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் உறுப்பினர் செயலராகவும் அங்கம் வகிப்பர் என அறிவித்து இருக்கிறது தமிழக அரசு.

ஆனால் ஆளுநரோ நாட்டிற்கு எதிராக செயல்பட்ட எந்த ஒரு கைதியையும் விடுதலை செய்யவே முடியாது அதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை என அடித்து கூறி இருக்கிறாராம் தொடர்ந்து ஆளுநர் பால்வேறு விவகாரங்களில் ஆளும் அரசின் முடிவை ஏற்காத காரணத்தால் என்ன செய்வது என தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறதாம் திமுக அரசு. எந்த வித சத்தமும் இல்லாமல் புத்தாண்டு மாற்றத்தையும் சிறை கைதிகள் விடுதலை விவாகரத்திலும் ஆளுநர் தனது பணியை செய்து இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.