முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான முதல் முழு பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார் இந்த பட்ஜெட்டை ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சிறந்த திராவிட மாடல் பட்ஜெட் என வாழ்த்தி வருகின்றனர், எதிர் கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.
குறிப்பாக வந்த ஒரு வருடத்தில் தமிழக அரசு கடன் அதிகம் பெற்று இருப்பதும் ஒவ்வொரு தமிழர்கள் மீதான கடன் அதிகரித்து இருப்பதும் தெரியவந்துள்ளது, மேலும் தாலிக்கு தங்கம், இலவச லாப்டாப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளன இது ஒரு புறம் என்றால் நடிகர் சத்யராஜ் திமுக அரசின் பட்ஜெட்டை வாழ்த்தி பேசினார்.
அதாவது இருக்கின்ற நிதியை வைத்து சிறப்பாக தயாரிக்கப்பட்ட ’திராவிட மாடல் பட்ஜெட்’... தொலை நோக்கு சிந்தனையுடன் உள்ளது அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டார் சத்யராஜ். வழக்கமாக மொழி அரசியல் பேசும் சத்யராஜ் திமுக அரசின் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து பாராட்டி வருகிறார், முதல்வர் ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தியை புகழ்ந்து பேசினார்.
இன்று பட்ஜெட்டை சிறந்த பட்ஜெட் என பாராட்டி பேசி இருக்கிறார் இதன் பின்னணி என்ன என்ற கேள்விக்கு திரை துறை மத்தியில் சில தகவல்கள் கிசு கிசுத்து வருகிறது, சத்தியராஜ் திமுக மூலம் மாநிலங்களைக்கு செல்ல இருப்பதாகவும் அதற்கான ஒத்திகைதான் இப்படி திமுக மற்றும் அதன் தலைமையை வாழ்த்தி பேசுவதாக சிலர் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் ஈமு கோழி ஊழல் வழக்கு விசாரணை மத்திய அரசின் ஏஜென்சிகள் மூலம் விசாரிக்க படலாம் என்ற பத்திரிகை செய்தியை அடிப்படையாக கொண்டு முன்பே தப்பித்து கொள்ள மாநில அரசிடம் சத்யராஜ் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் அரசியல் அல்லது தனி லாபம் காரணமாக தொடர்ந்து சத்யராஜ் திமுக தலைமையை பாராட்டு வருவதாக இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ஒரே பேசுபொருளாக மாறியுள்ளது, ரஜினியை எதிர்த்து அரசியல் செய்யலாம் என இருந்த சத்யராஜ் இப்போது திமுக பக்கம் ஒதுங்கி இருப்பதும் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருவதும் அனைத்தும் செட்டப் என்றே கருத தோன்றுகிறது.