Tamilnadu

அதிர்ச்சியில் இஸ்லாமிய அமைப்புகள்.. முமுவதும் வரவேற்கிறோம் உடனே நிறைவேற்றுங்கள் பாஜக அரசு முடிவை வரவேற்ற "வீரமணி"!

Modi and veeramani
Modi and veeramani

பாஜக அரசு எடுத்த முடிவை கண்களை மூடி எதிர்த்து வரும் திராவிட கழக தலைவர் வீரமணி பாஜக அரசு எடுத்துள்ள பெண்களுக்கான திருமண வயதை உயர்த்தும் முடிவை வரவேற்று அறிக்கை வெளியிட்டதோடு இல்லாமல் உடனே நிறைவேற்றவும் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-


தெற்கே தந்தை பெரியார் - வடக்கே டாக்டர் அம்பேத்கர் செய்த பிரச்சாரம் காலத்தை வென்று அமைதிப் புரட்சியை உருவாக்கி வருகிறதுபெண்ணின் திருமண வயது 18-லிருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை முடிவு பாராட்டுகிறோம் - வரவேற்கிறோம் - விரைந்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத் திருத்தம் செய்ய ஒன்றிய அமைச்சரவை நேற்று (16.12.2021) முடிவு எடுத்துள்ளது. விரைவில் அதற்கேற்ப திருமண வயதை பெண்ணுக்கு 21 ஆக (தற்போது 18 வயது) உயர்த்தும் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்க மாற்றமாகும் பல ஆண்டுகளுக்கு முன்பே வரவேற்றோம் இதை தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் பல ஆண்டுகளுக்கு முன்பே வரவேற்ற பழைய வரலாறு இன்றைய புதியதலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

பெண்கள் படிக்கவே கூடாது என்ற கருத்து; பெண்கள் ஒருபோதும் சுதந்திரத்திற்குத் தகுதியானவர்கள் அல்லர்; பெண்களுக்கு தனிச் சொத்துரிமை கொடுக்கவே கூடாது என்பன போன்ற கடைந்தெடுத்த பிற்போக்குக் கருத்துகளை எதிர்த்து தெற்கே தந்தை பெரியாரும், வடக்கே டாக்டர் அம்பேத்கரும் செய்த பிரச்சாரமும், பாடுபட்டதும் இன்று காலத்தை வென்று அமைதிப் புரட்சியை உருவாக்கி வருகிறது!

தந்தை பெரியார் பல சுயமரியாதைத் திருமண மேடைகளில் ‘‘21 வயது வரை பெண்கள் திருமணம்பற்றியே யோசிக்காமல், படிப்பு, சொந்தக்காலில் சுதந்திரமான வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதுபற்றியே சிந்தித்து, பிறகே திருமணம் செய்துகொள்ளுவது நல்லது. மனப்பக்குவத்தில் நல்ல முதிர்ச்சியுடன் தனது வாழ்விணையரைத் தேர்வு செய்ய முடியும்.பாராட்டத்தக்கது - அரசியல் கட்சிக் கண்ணோட்டமின்றி வரவேற்கிறோம்

ஒன்றிய அரசின் இந்தத் திட்டம் பாராட்டத்தக்கது - அரசியல் கட்சிக் கண்ணோட்டமின்றி வரவேற்கிறோம். இந்திய மனித சராசரி வாழ்வு இப்போது ஆணுக்கு சுமார் 67 வயது; பெண்ணுக்கு  70 வயது என்று பெருகி வளர்ந்தோங்கிய நிலையில், பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 வயதாக - மூன்று ஆண்டுகள் உயர்த்துவது பொதுநலக் கண்ணோட்டத்திலும் மிகவும் வரவேற்கத்தக்கது.

காலத்தின் கட்டாயம்!‘மாறுதலை ஏற்க முடியாது’ என்று எப்பேர்ப்பட்ட முதலைப்பிடி மனிதர்களும்,  பிடிவாதம் காட்ட முடியாது. பழைமைவாத பத்தாம்பசலி கூட கால வளர்ச்சியில் மாறித்தான் தீரவேண்டும் - இது காலத்தின் கட்டாயம்!‘சனாதனம்‘ என்ற பெயரில் மாறுதலை எதிர்த்தால், அது கடல் அலையைத் தடுத்து நிறுத்திட ஆணை பிறப்பித்த கான்யூட் மன்னன் கதைபோலத்தான் ஆகிவிடுமே தவிர, வேறில்லை.

எவ்விதத் தயக்கமும் இன்றி விரைந்து சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி, நாட்டையும், வீட்டையும் காப்பாற்ற முன்வருதல் இன்றிமையாதததும் - இந்த காலகட்டத் தேவையுமாகும் என குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் வீரமணியின் அறிக்கை பெண்களின் திருமண வயதை உயர்த்த கூடாது என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திவரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.