Tamilnadu

ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்யப்போகிறோம் ஆட்சியே முடிந்தாலும் "திமுகவால்" நிறைவேற்ற முடியாது அதிரடி காட்டிய கிருஷ்ணசாமி!

modi and krishnasamy
modi and krishnasamy

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்துக்கள் எழுச்சி மாநாடு நடத்த இருப்பதாகவும் இந்துக்களாக ஒருங்கிணைக்க போவதாகவும்,5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தாலும் திமுக அரசால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி. இது குறித்து அவர் குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு :- 5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்தாலும் திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது.!விருதுநகரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:


புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்துக்கள் எழுச்சி மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி 2022 மாா்ச் 9 இல் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளி விழா சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்திய அளவில் உள்ள ஆன்மிக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா எண்ணிக்கையில் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தாலும் கூட குறிப்பாக தமிழகத்தில் இந்துக்கள் என்று சொல்வதற்கே இந்துக்கள் கூச்சப்படுகின்றனர். இந்த சூழலை மாற்றி அமைத்து இந்துக்கள் என தலைநிமிர்ந்து சொல்ல வேண்டும். அதன் மூலம் இந்திய தேசத்தின் அடையாளம் பிரதிபலிக்கப்பட வேண்டும். இந்துக்கள் ஏற்றத்தாழ்வின்றி சமூக நல்லிணக்கம், சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதே இம்மாநாட்டின் நோக்கம். இதன் மூலம் இந்திய தேசத்தை அடையாளப்படுத்த முடியும். ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்மொழி பேசுவோரை ஒரே சமுதாயமாக ஒன்றிணைக்கவில்லை. அதற்கு அரசியல் ரீதியாக சமுதாயத்தை பிளவுபடுத்தியதே காரணம்.

தீபாவளி பண்டிகை நேரத்தில் மட்டும் பட்டாசு மாசு பிரச்னை உருவெடுக்கிறது. இதை முன்னரே சரி செய்ய பட்டாசு உற்பத்தியாளா்கள், மாநில அரசு முன்வர வேண்டும். அருப்புக்கோட்டை அருகே சட்டவிரோதமாக இயங்கும் தென்பாலை குவாரியால் குடியிருப்புகள் சேதம் அடைவதுடன், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை சமூக பிரச்னையாகத் தான் பாா்க்க வேண்டும். இப்பிரச்னை மட்டுமல்ல பல்வேறு சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளுக்கு மதுபான கடைகளே காரணமாக உள்ளன. அனைத்து மதுபானக் கடைகளையும் மூடினால் மட்டுமே குற்ற சம்பவங்கள் குறையும். மேலும் தமிழகமும் முன்னேற்றமடையும். 5 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்தாலும் திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளார் கிருஷ்ணசாமி.