Tamilnadu

கடவுளை விமர்சிக்கலாம் உங்களை விமர்சிக்க கூடாதா பேக்கரி டீலிங் என்ன கொந்தளித்த கார்ட்டூஸ்னிட் பாலா!

Cartoonist bala
Cartoonist bala

பெரியார் ராமசாமி குறித்து விமர்சனம் செய்பவர்களை தமிழக அரசு தொடர்ந்து ஒரு தலைப்பட்சமாக கைது செய்து வருவதாகவும், இது கருத்து சுதந்திரத்தின் மீது விழுந்த அடி என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இந்த சூழலில் கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார் அதில்.,விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா பெரியார் 'சாமி'. என்ற தலைப்பில் அவர் குறிப்பிட்டது பின்வருமாறு


இந்துத்துவ சங்கிகளை எதிர்ப்பதற்காக அவர்களது நம்பிக்கையான கடவுளர்களை திராவிட சங்கிகள் கழுவி ஊத்தலாம் அந்த கடவுளர்கள் பற்றிய கதைகளை மேடைப்போட்டு இரட்டை அர்த்த வசனத்தில் பேசலாம்.அது கருத்து சுதந்திரம் எனில் ஈ.வெ.ராமசாமியாரை எதிர்ப்போரும் ராமசாமியாரின் எழுத்துகளில் இருந்தே அவரை அம்பலப்படுத்தவும் தானே செய்வார்கள் ஒரு விசயத்தில் நமக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் எதிரிகளுக்கும் இருக்கும்தானே 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கடவுளர்கள் என்றும் அவர்களின் இதிகாச நம்பிக்கைகளையும் அந்த கடவுளர்களின் பக்தர்களின் நம்பிக்கையை விமர்சிக்கலாம்.. நம்மோடு இந்த நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணுக்கு தெரிந்த மனிதர் ஈ.வெ.ராம்சாமியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா என்ன.. (சீதையின் மைந்தன் சில வார்த்தை பிரயோகங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அவர் சொன்ன பல தகவல்கள் பெரியாரின் வார்த்தைகளே என்பதை ஆதரத்துடன்தான் பதிவு செய்கிறார்.) 

ராமசாமியார் பேசிய எழுதிய பல விசயங்களை திராவிட ஆதரவாளர்களாலயே பொதுவெளியில் இன்று பேச முடியாதளவுக்கு கேவலமானது ஏனெனில் பொது பிம்பம் குறித்த எந்த கவலையும் இல்லாமல் ராமசாமியார் அவர்கள் அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் கருத்துகளை அள்ளிவிட்டிருக்கிறார். தன்னை விமர்சிப்பது குறித்து வாழ்ந்த காலத்திலே அவரே கவலைப்படாதபோது அவரது பக்தகோடிகள் ஏன் அவரை புனித பசுவாக மாற்றுகிறார்கள்.. 

அது சரி திராவிட அடையாள அரசியலை எதிர்க்கும் தமிழர்களை குறிவைத்து கைது செய்யும் பாசிச திமுகவின் அரசு எச் ராஜாக்களிடம் எஸ்.வி.சேகர்களிடம் ஏன் மட்டையாக மடங்கி நிற்கிறது அது என்ன திராவிடத்தின்  பேக்கிரி டீலிங்கா பேக் கதவு டீலீங்கா என கேள்வி எழுப்பியுள்ளார் பாலா.

திமுகவின் கொள்கைக்கு நேர் முரண் கொண்டவர்களை கைது செய்துவரும் தமிழக காவல்துறை பெரியாரிஸ்ட்கள் மீது இந்து மத கடவுள்களை இழிவு படுத்தி பேசியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள போது அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது