பா. ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது எனும் படம் வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் இந்த படம் ஓரின சேர்க்கையாளர்களை மையமாக கொண்ட படம் என்ற விமர்சனங்கள் எழுந்த போது தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படம் சென்சார் போர்டு கத்தரி போட்டதாக கூறப்படும் தகவலால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமன் நடிக்கும் திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார்.
இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்காக தயாராக இருக்கும் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி கவனத்தைப்பெற்றது. இந்நிலையில் படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியான விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்பு குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் போஸ்டர் தன் பால் ஈர்ப்பாளர்களின் அடையாள கொடியின் வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் 'நட்சத்திரம் நகர்கிறது' படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த வாழ்க்கையை காதல் மூலம் பதிவு செய்யும் படைப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் சினிமா துறையை சார்ந்த JSK.கோபி அவரது முக நூல் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில், பா ரஞ்த்தின் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் இன்று சென்சாருக்கு சென்றது.
படத்தில் முழுக்க முழுக்க பிற சமூகங்களை தவறாக காட்டி இருப்பதாகவும் மற்றும் ஜாதி கலவரத்தை உருவாக்கும் வகையில் இருப்பதால் பல காட்சிகளை நீக்கவேண்டும் என்றும் படத்திற்கு Aசர்டிபிகேட்தான் தரமுடியும் என்று சென்சார் அதிகாரிகள் சொல்லி விட்டார்களாம்.
இதனையடுத்து படக்குழு மேல்மட்ட முறையீடுக்கு செல்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். தொடர்ச்சியாக ரஞ்சித் திரைப்படங்கள் சமூக மோதலை உண்டாக்கும் வண்ணம் வெளிவருவதால் அப்படத்தை முறையாக தணிக்கை செய்யவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் திரைப்பட தணிக்கை அமைப்பிற்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.இனி ரஞ்சித்தின் நட்சத்திரம் நகருமா? நகராதா? என வரும் நாட்களில் தெரிந்துவிடும்.