Tamilnadu

அன்று ஜெயலலிதா இன்று கர்நாடகா இதுதான் வாய்ப்பு என்ன செய்ய போகிறது தமிழக பாஜக?

annamalai and jayalalitha
annamalai and jayalalitha

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்த மதமாற்ற தடுப்பு சட்டத்தை கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளதாகவும் தற்போது இதன் மூலம் தமிழக பாஜகவிற்கு நல்ல வாய்ப்பு உண்டாகி உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு? கர்நாடக மாநிலத்தில் நிறைவேற்றபட்ட கட்டாய மத மாற்ற சட்டம் முன்பே இருந்த சில மதமாற்ற ஏமாற்றங்களை தடுக்கும் சட்டத்தின் புதிய வடிவம். இந்த சட்டபடி ஒருவரை ஆசைகாட்டியோ, பொருளோ, வேலைவாய்ப்போ இதர விஷயங்களை காட்டியோ மதம் மாற்ற முடியாது.


கூட்டாக மதம் மாற்றுவது, இன்னொரு மதத்தை வெறுக்கும்படி தூண்டி மதம் மாற்றுவது போன்றவை சட்டபடி நடவடிக்கை எடுக்கபட்டு தடுக்கபடும் இதை செய்வோருக்கு தண்டனை வழங்கபடும், அதாவது ஆத்மார்த்தமாக மதம் மாறாமல் நிர்பந்தம், மூளை சலவை, ஒருவனின் ஏழ்மை அல்லது சூழலை பயன்படுத்தி அவனை குழப்பி ஆசைகாட்டி இழுத்து சென்று மதம்மாற்றுதல் தடுக்கபடும்.அப்படியும் ஏதும் எதிர்பாராமல் மதம் மாறுபவர்கள் சட்ட அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் முன்னிலையில்தான் மதம் மாறமுடியுமே தவிர தானாக மாறிவிட முடியாது, இந்தியாவில் ஆத்மார்த்தமாக ஞானம் தேடி யாரும் மதம் மாறியதாக தெரியவில்லை., ஏதோ ஒரு வகையான நிர்பந்தமும் சில ஆசைகாட்டுதல்களும் பிரதிபலன்களுமே அவர்கள் மதம் மாற பெரும்பான்மையான காரணம்.

இதே போன்ற சட்டத்தை முன்பு ஜெயலலிதாவும் பிறப்பித்தார், உண்மையில் இந்தியாவில் முதன் முதலில் மதமாற்ற தடைசட்டம் கொண்டுவரபட்ட மாநிலமாக அப்பொழுது தமிழகம்தான் அறியபட்டது, ஆனால் ஜெயலலிதா திடீரென பின்வாங்கினார், அவரின் ஊழல் குற்றசாட்டுகளோடு இந்த எதிர்ப்பும் சேரும் என அஞ்சினார், சிறுபான்மை வாக்குகளை கருணாநிதி அள்ளிவிடுவார் எனும் ஒரு பயமும் அவருக்கு ஊட்டபட்டது. ஜெயா ஒரு தேசியவாதி ஆனால் திராவிட அரசியலை அவரும் அவரை சுற்றியிருந்த சசிகலா தரப்பும் ஒருமாதிரி செய்தது இதில் ஜெயா குழம்பினார், ஆக ஜெயா செய்துவிட்டு பின் வாங்கியதை இன்று மிக சரியாக செய்திருக்கின்றது கன்னட அரசு.

நிச்சயம் தமிழக பாஜகவுக்கு இது அழகான வாய்ப்பு, இந்த சட்டம் இங்கு அவசியம் என மிக அட்டகாசமான அரசியல் ஆட்டத்தை அவர்கள் முன்னெடுக்கலாம், அரசு நிலத்தில் கோவில்கள் என இந்து கோவில்கள் தொடர்ந்து இடிக்கபடுகின்றன, இது ஆக்கிரமிப்பினை அகற்றுதல் அரசுநிலத்தை மீட்டல் என ஒரு வாதத்துக்கு சொன்னாலும் இந்து ஆலய நிலங்கள் எவ்வளவோ எங்கெங்கோ ஆக்கிரமிக்கபட்டிருக்கின்றன சில இடங்களில் அரசே எடுத்திருக்கின்றது

அதற்கு ஈடாக இந்நிலங்களை இந்து ஆலயங்களுக்கு விட்டு கொடுக்கலாம் அல்லது சமய சார்பற்ற ஆக்கிரமிப்பு அகற்றம் என இந்து ஆலயங்களை போலவே மிஷனரிகளின் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகளையும் அகற்றலாம் அதை அரசு செய்யவில்லை, தமிழகத்தில் மதமாற்றங்களும் இன்னும் பல மர்ம சர்ச்களின் இயக்கங்களும் அதிகரித்திருக்கும் நிலையில் தமிழக பாஜகவுக்கு பந்தை பாஸ் செய்திருக்கின்றது கர்நாடகா, இதை எப்படி கமலாலயம் வைத்து ஆடபோகின்றது என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என குறிபிட்டுள்ளார்.