கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் “பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது. தமிழகத்திற்கு நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம்? தர முடியாது” என்கிறார் விமானத்துறை அமைச்சர் எனவும் கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் செலுத்திய GST வரி, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய மொத்த வரியை விட அதிகம். நாங்கள் 4 அல்ல… 14 கேட்க உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் என்று குறிப்பிட்டு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியாவை டேக் செய்து தெரிவித்துஇருந்தார் வெங்கடேசன்.
இதை பார்த்த மத்திய அமைச்சர் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் வெங்கடேசன் கூறுவது தவறான தகவல் என மறுப்பு தெரிவித்தவர் பாய்ண்ட் பாயிண்டாக விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- வெங்கடேசனின் உண்மையற்ற தவறான விளக்கத்தால் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் அடைந்தேன்.முதலாவதாக, வட மற்றும் தென்னிந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் (உ.பி மற்றும் கேரளா போன்றவை) ஒன்றுக்கு மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்களைக் கொண்டுள்ளன. எனவே, எம்.பி., மேற்கோள் காட்டிய கருத்து அடிப்படை ஆதாரமற்றது.
நமது அரசு நாட்டின் எந்தப் பகுதியிலும் புதிய விமான நிலையங்களுக்கான முன்மொழிவுகளுக்கு செயலாற்றி கொண்டு இருக்கிறது உண்மையில், இந்தியாவில் தற்போது உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கையை. அதிகரிப்பதை நோக்கமாகக் நாங்கள் கொண்டுள்ளோம்.மூன்றாவதாக, தற்போது மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதால், எம்.பி விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்த் வழங்கவேண்டும் என கோரிக்கை வைப்பது ஏன் என தெரியவில்லை ஏற்கனவே மதுரை சர்வதேச விமானமாக தானே உள்ளது.
மேலும் வெங்கடேசனின் குற்றச்சாட்டிற்கு மாறாக, மதுரைக்கு சர்வதேச விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் விமான அமைச்சகதின் ஆதரவை வழங்கியிருந்தேன், இந்திய விமான நிறுவனங்களை மதுரைக்கு பல்வேறு சர்வதேச விமானங்களை இயக்க கோரிக்கைவிடுத்து இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதாவது அமைச்சர் சொல்லாத ஒரு விஷயத்தை கூறி தற்போது அமைச்சர் கொடுத்த விளக்கத்தால் அம்பலப்பட்டு போயிருக்கிறார் மதுரை கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன்.
நீங்கள் பெயர் வாங்கவும் ஊடகங்களில் உங்கள் பெயர் வரவும் இப்படி தவறான தகவலை பரப்புவது சரியா இதெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு அழகா என பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். உங்களை அமைச்சர் நேரு ஒருமையில் பேசியது போல் இல்லாமல் மத்திய அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா நேர்மையான பதிலை கொடுத்து இருக்கிறார் இதுவே பாஜகவினர் தரம் என்ன என்பது உங்களுக்கு புரியும் என்றும் பாஜகவினர் பதிலளித்து வருகின்றனர்.