Cinema

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த இளம் சாதனையாளர்...! யார் தெரியுமா?

Annamalai, alisha abdulla
Annamalai, alisha abdulla

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு இன்று பாஜகவில் இணைந்து இருக்கிறார் சென்னையை சேர்ந்த பிரபல கார் மற்றும் பைக் பந்தய வீராங்கனை அலிஷா அப்துல்லா. இந்திய கார் பந்தய உலகில் இவரை தெரியாதவர்களே இல்லை என்றும் கூறலாம்.


பாஜக விளையாட்டு பிரிவு சார்பில் மாநிலம் முழுவதும் பிரமாண்டமாக பிரதமர் மோடி பிறந்தநாளில் தொடங்கி கபடி போட்டி நடக்க இருக்கிறது. மோடி கபடி லீக் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் கபடி போட்டி நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி, அதாவது பாரத பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு அன்று கபடி போட்டி தொடங்கி செப்டம்பர் 30 தேதி அன்று இருந்து போட்டி நடக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான வெற்றி கோப்பை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது, இதில் அண்ணாமலை மற்றும் மூத்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்தனர், இந்த நிகழ்ச்சியின் போது பிரபல கார் மற்றும் பைக் பந்தய வீராங்கனை அலிஷா அப்துல்லா பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் அவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி துண்டு அணிவித்து வரவேற்பு கொடுத்தார்.

இந்த நிலையில் அலிஷா அப்துல்லா தான் பாஜகவில் இணைந்து இருப்பது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார், பாஜகவில் கொடுக்கப்படும் அங்கீகாரம் மற்றும் மரியாதை போன்றவைகாக பாஜகவில் இணைந்து இருப்பதாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு பயணிப்பேன் எனவும் அலிஷா குறிப்பிட்டுள்ளார்.



மோடி கபடி லீக் சுமார் 234 தொகுதிகளில் 5000 டீம், குறைந்தபட்சம் 65 ஆயிரம் முதல் 75 ஆயிரம் கபடி விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், தமிழ்நாடு கபடி அசோசியேசன் உடன் கூட்டணி வைத்து இந்த போட்டி நடக்க இருக்கிறது கபடி இறுதி போட்டி, மதுரையில் மூன்று மற்றும் நான்கு நாட்களில் இறுதி போட்டி 60 அணிகள் போட்டியிடப் போகிறது. கட்சியின் மாவட்டம் 60. எனவே 60 அணி டீம் வைத்து மதுரையில் நாட்கள் நடைபெற உள்ளது. மதுரை மிதுரா காலேஜ் இறுதிப் போட்டி நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது

முதல் பரிசு 15 லட்சம், இரண்டாம் பரிசு ரூ 10 லட்சம், கடைசி மூன்றாம் பரிசு 5 லட்சம் கொடுக்கவிருக்கிறோம். பரிசுத்தொகை மட்டும் 35 லட்சம். முதல் பரிசு பெற்ற அணியை டெல்லியில் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை மாநில தலைவர் அண்ணாமலை ஏற்படுத்தி தருவார். மோடி கபடி லீக் அரசியல் கிடையாது. இதற்காக கட்சி பேனரை வைக்கவில்லை. இந்த போட்டியில் இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு அழைப்பு கொடுக்கவுள்ளோம் என அமர்பிரசாத் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.