அதிமுகவில் இருந்து திமுகவிற்கும் திமுகவில் இருந்து அதிமுகவிற்கும் வேட்பாளர்கள் மாறுவது தொடர்கதையாக தமிழகத்தில் தேர்தலின் போது நடைபெறும் சம்பவம், இந்த நிலை இந்த ஆண்டு மாறியுள்ளது, திமுகவை சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ கள் குக செல்வம், சரவணன் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
திமுகவில் உரிய முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் குக செல்வம், சரவணன் ஆகியோர் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில் சீட் கிடைக்காத முன்னாள் எம்எல்ஏ-கள் பலர் பாஜகவில் இணைய இருப்பதாக முக்கிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது, இந்த சூழலில் திமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான கனிமொழி ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக பல நாட்களாக செய்தி வெளியானது.
மேலும் கனிமொழி செல்லும் இடங்களில் அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் கனிமொழி புகைப்படத்துடன் பேனர் வைத்தது, உதயநிதி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும், இதையடுத்து ஸ்டாலினிடம் முறையிட, இனி கட்சி நிகழ்ச்சிகளில் அண்ணா கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்களை தவிர வேறு யாருடைய புகைப்படமும் இருக்க கூடாது என அறிக்கை வெளியிட பட்டது.
ஆனால் அதற்கு மாறாக உதயநிதி செல்லும் இடங்களில் அவரது புகைப்படத்துடன் பேனர் வைக்க படுகிறது, இதன் மீது தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம், அதாவது கனிமொழியின் புகைப்படம் பேனர்களில் இடம்பெறுவதை தவிர்க்கவே இப்படி ஒரு அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவாளர்களாக அறியப்படும் முக்கிய நபர்களுக்கு சீட் கேட்டு பரிந்துரை செய்துள்ளார் கனிமொழி பரிந்துரை செய்த நபர்களில் எப்படியும் குறைந்தது 10 பேருக்காவது சீட் கிடைக்கும் என்று கனிமொழி நினைத்துள்ளார் ஆனால் சிட்டிங் எம். எல்.ஏ இருவரை தவிர மற்ற யாருக்கும் கட்சி தலைமை சீட் கொடுக்க வில்லையாம்.
இதனால் கடும் அதிருப்தியில் கனிமொழி இருப்பதாகவும், வேட்பாளர் பட்டியல் வெளியான அன்று கூட யாருக்கும் வாழ்த்து. தெரிவிக்கவில்லையாம், தான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் செல்ல முடிவு எடுத்து இருப்பதுடன் தீவிர தனது ஆதரவாளர் மார்க்கண்டேயன் மற்றும் கீதா ஜீவன் போன்ற சிலரை மட்டுமே ஆதரித்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம்.
தொடர்ந்து கனிமொழி பல்வேறு விஷயங்களில் பொறுமையாக இருப்பதாகவும் விரைவில் குக செல்வம், சரவணன் ஆகியோர் வரிசையில் அதிருப்தியில் இருக்கும் கனிமொழி திமுக தலைமையுடன் கருத்து வேறுபாட்டின் காரணமாக பாஜகவில் இணையலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து திமுகவில் ஏற்படும் பிளவு தற்போதைய நிலையில் அதிமுகவினரை காட்டிலும் பாஜகவினருக்கே ஆதாயத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.