திமுக செய்தி தொடர்பாளர்களில் ஒருவரும் உதயநிதியின் அரசியல் வருகைக்கு முன்பு அடுத்த இளைஞர் அணி தலைவர் என பேசப்பட்ட பிரசன்னாவிற்கு நடந்த சம்பவத்தை வைத்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் இணையத்தில் அவரை கடுமையாக கிண்டல் அடித்து வருகின்றனர்.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்து முக்கிய கட்சிகளும் தொகுதி பங்கீடு நடத்தி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டனர், இந்த நிலையில் திமுகவை சேர்ந்த பிரசன்னா வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார், சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளை குறிவைத்து விருப்பமனு கொடுத்துள்ளார்.
எப்படியும் இந்த முறை தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் ஒருவர் உதவியுடன் காய்நகர்த்தி வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் சிலர் பொது வெளியில் கருத்துக்களை பதிவிட்டனர், இந்த தகவல் காற்று வாக்கில் பரவ திமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் இருவர் பிரசன்னாவிற்கு இடம் கொடுக்க கூடாது என வியூகம் வகுக்கும் குழுவிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.
அதற்கு காரணமாக பிரசன்னா மீது CAA போராட்டத்தின் போது பணம் வாங்கி கொண்டு கூட்டங்களில் பேசியதாக கல்யாண சுந்தரம் முன்வைத்த குற்றசாட்டு, வெளியான வீடியோ காட்சி, அத்துடன் பொது விவாதங்களில் பாஜகவை விமர்சனம் செய்வதாக இந்து மதம் குறித்து அவர் பேசிய பேச்சுக்கள் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தகவல் ஸ்டாலின் கவனத்திற்கும் செல்ல கடைசி கட்டத்தில் பிரசன்னா விருப்ப மனுவை நிராகரித்து இருக்கிறார்கள், நேர்காணல் மூலம் எப்படியாவது ஸ்டாலினை சந்தித்து பேசிவிடலாம் என காத்திருந்த பிரசன்னாவிற்கு அழைப்பே வரவில்லையாம், வேட்பாளர் பட்டியல் வெளியான அன்று பட்டியலில் தன் பெயர் இல்லை என பார்த்ததை அடுத்து முகநூலில் யாருக்கும் வாழ்த்து கூறாமல் வெறும் கையை மடித்து பலம் காட்டும் 💪சைகையை மட்டும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
மேலும் ஊடகம் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வியில் எனக்கு எப்போது எங்கள் தலைவர் ஸ்டாலின் சீட் கொடுக்க நினைக்கிறாரோ தரட்டும் என குறிப்பிட்டு பேசியுள்ளார் இந்த வீடியோ காட்சியை குறிப்பிட்டு பாஜகவினர் எப்போதும் திமுகவில் வணக்கம் வாரிசுகளுக்கு மட்டுமே இடம் கிடைக்கும், பிரசன்னா போன்றவர்கள் பொது கூட்டங்களில் பேச மட்டுமே பயன்படுவார்கள் எனவும் கிண்டல் அடித்து வருகின்றனர்.