Tamilnadu

" சுந்தரவள்ளியை" சுளுக்கு எடுத்த கன்னியாகுமரி to சென்னை மக்கள் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..?

Sundharavalli
Sundharavalli

தமிழகத்தில் தாமரை மலராது என பேசிய அரசியல் தலைவர்களுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது பாஜக இந்த சூழலில் தற்போது தனித்து நின்று நகராட்சி தேர்தலை சந்தித்த பாஜக மாநிலம் முழுவதும் மிக பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது,குறிப்பாக பல இடங்களில் ஆளும் கட்சியான திமுக எதிர்க்கட்சியான அதிமுக என பல வேட்பாளர்களை வீழ்த்தி தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.


இந்த சூழலில் பாஜக தமிழகத்தில் வெற்றி பெறாது என வாய் துடுக்காக பேசிவந்த சுந்தரவள்ளிக்கு நகராட்சி தேர்தல் மூலம் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளனர் மக்கள் இதில் கன்னியாகுமரி மக்கள் பெருவாரியான வெற்றியை கொடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியில் 4,5,6,7,8,9,10,12 வார்டுகளில் பாஜக அமோக வெற்றி அப்பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சியில் 10-வது வார்டில் பா.ஜ.க வேட்பாளர் முதன் முறையாக வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வடுகபட்டி பேரூராட்சி 5-வது வார்டில் பா.ஜ.க வேட்பாளர் வசந்த் பாலாஜி வெற்றி. கோவை தெற்கு மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சி 2மற்றும் 3ம் வார்டுகளில் பாஜக வெற்றி. திருமலையம்பாளையம் பேரூராட்சியில் 3வது வார்டில் பா.ஜ.க வேட்பாளர் தமிழரசி வெற்றி.

திருவட்டார் 1வது வார்டு மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் பேரூராட்சி 3வது வார்டில் பாஜக வெற்றி.நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சி வார்டு 6-ல் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பல்லடம் நகராட்சியில் பாஜக இரண்டு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி வார்டு 26 பாஜக வேட்பாளர் முருகானந்தம்‌ வெற்றி பெற்றுள்ளார். அதேபோல, ஈரோடு மாவட்டம் கிளாம்பாடி பேரூராட்சி 13வது வார்டில் பாஜக வேட்பாளர் ஜெகதாம்பாள் வெற்றி.

சற்றுமுன் தலைநகர் சென்னையில் 134 வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் மிக பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார்,இதன் மூலம் தமிழகத்தில் பாஜக கால் பதிக்க முடியாது தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது என பேசிவந்த சுந்தரவள்ளி உள்ளிட்ட போராளிகளுக்கு மிக பெரிய பதிலடியை சென்னை முதல் கன்னியாகுமரி வரை மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் கொடுத்துள்ளனர்.

மொத்தத்தில் இனி சுந்தரவள்ளி போன்றோர் தமிழகத்தில் தாமரை மலராது என பேசினால் அந்த வாயை மக்களே உள்ளே வைத்து வாங்கு வாங்கு என வாங்கி விடுவார்கள் என்றே கூறலாம்.

More watch videos