நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் திமுகவிற்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ள சூழலில் எதிர்க்கட்சியான அதிமுக எதிர்பார்த்த இடங்களை பெறாமல் தோல்வி அடைந்துள்ளது, இந்த சூழலில் பாஜக கூட்டணியில் இருந்தால் மூன்று மாநகராட்சி வெற்றி கிடைத்திருக்கும் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பரபரப்பாக தொடங்கி, மாலையில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையில், இந்தத் தேர்தலில் ஒரு வார்டு கவுன்சிலர் கூட பாஜக பெறாது என்று கூறப்பட்ட நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் கண்ட பாஜக, 21 மாநகராட்சியில் 22 வார்டுகளை கைப்பற்றி உள்ளது.தொடர்ந்து, நகராட்சியில் 56 வார்டுகளிலும், பேரூராட்சியில் 230 வார்டுகளிலும் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில், ஒரு இடத்தில் பாஜக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரியில் சில இடத்தில் திமுக மற்றும் அதிமுகவை காலி செய்துள்ளது பாஜக. நகர்புற உள்ளாட்சி முடிவுகளின் படி திமுக, அதிமுக முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது இந்த சூழலில் இதுநாள் வரை அதிமுகவால் பாஜகவிற்கு லாபம் என இருந்த சூழலில் தற்போது பாஜகவால் மட்டுமே அதிமுக பலன் அடைந்தது தெரியவந்துள்ளது, கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெற அதிமுக பாஜக தனித்து போட்டியிட்டதே காரணம் என தெரியவந்துள்ளது.
பாஜக சென்னையில் பல இடங்களில் அதிமுகவை காட்டிலும் அதிக வாக்குகளை பெற்றுள்ளது, கோவையில் பாஜக அதிமுக கூட்டணியாக தேர்தலை சந்தித்தால் கோவை மாநகராட்சியை கைப்பற்றி இருக்கலாம் மேலும் நாகர்கோவில் நகராட்சியிலும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றிபெற்று இருக்கும் சூழல் உண்டாகியுள்ளது.
இதே நிலைமை பல பேரூராட்சி வார்டுகளில் நடந்துள்ளது, வந்திருக்கும் முடிவுகள் அடிப்படையில் அதிமுக பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து இருந்தால் கூடுதலாக 400 இடங்கள் வரை பிடித்து இருக்கலாம் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன, இந்த சூழலில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் அதிமுக கட்சியின் தலைமையை தொடர்பு கொண்டு உங்கள் சுய லாபத்தால் மட்டுமே இப்போது கொங்கு மண்டலத்தை இழந்தோம், உண்மையில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து இருந்தால் பல இடங்களில் வெற்றி பெற்று இருப்போம்.
எடப்பாடி பழனிச்சாமியின் ஈகோ மற்றும் சிவி.சண்முகம் இன்னும் பிறரின் வாயால் கூட்டணியை இழந்தது மட்டுமல்லாமல் படு தோல்வியை சந்தித்து இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நேரிலும் பலரிடம் எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர்.
ஒத்த ஓட்டு என கிண்டல் செய்யபட்ட பாஜக இப்போது 300 மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று இருப்பதும் போட்டியிட்ட இடங்களில் 12% வாக்குகளை பெற்று இருப்பதும் மொத்தமாக 5.33% வாக்குகளை பெற்று இருப்பதும் பாஜகவின் பலம் என்ன என்பது அதிமுகவிற்கு மட்டுமல்ல பல கட்சிகளுக்கு தெள்ள தெளிவாக உணர்த்தியுள்ளது.
More Watch Videos