தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார் முந்தைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் இந்த இரு நியமனங்களும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
உளவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என உயர் பதவிகளில் பொறுப்பு வகித்தவர் தமிழக ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது சந்தேகத்தை உண்டாக்குவதாக இருக்கின்றது எனவும், புதிய ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இன்னும் பிற இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேர்தல் உள்ளிட்ட அவசர அரசியல் சூழல் இல்லாத நிலையிலும், தனி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியில் உள்ள சூழலில் புலனாய்வு திறன் கொண்டவரும், நாகலாந்து போன்ற ஆயுத குழுக்கள் நிரம்பிய மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு ஆர. என் ரவி மாற்றப்பட வேண்டிய காரணம் அரசியல் நோக்கம் இல்லை வேறு என விவகாரத்தை நன்கு அறிந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த சூழலில் இந்தியாவில் குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து அதிக அளவில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகரித்து வருவதும், நாட்டில் கைது செய்யப்படும் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுவது தமிழகம் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களாக 60% இருப்பதும் அறிந்த மத்திய அரசு தேசியபுலனாய்வு அமைப்பான NIA கிளையை சென்னையில் அமைத்தது.
இந்நிலையில் கேரள மற்றும் தமிழக ஆளுநர்கள் இரு மாநிலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தொடர்பில் உள்ள அரசியல் பிரபலங்கள், நாட்கள் பெயரில் இயக்கத்தை நடத்துபவர்கள், அவர்களுக்கு உதவி செய்யும் பெரு முதலாளிகள் என முதற்கட்ட பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் நேற்றைய தமிழக மற்றும் கேரள ஆளுநர் சந்திப்பு நடை பெற்றுள்ளது.
அன்றைய தினமே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பகுதியின் கொடி அதிகாரி தளபதி ரியர் அட்மிரல் புனித் சாத்தாவும் ராஜ் பவனில் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது, இரு மாநில ஆளுநர்களும் தமிழக கேரளா முதல்வர்களிடம் தாங்கள் அரசியலில் தலையிட போவதில்லை அதே போல் நீங்களும் இந்த விவகாரங்களில் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறியிருப்பதாகவும் மாநில முதல்வர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க தங்கள் தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும்.
இதன் அடிப்படையில் இரண்டு மாநிலங்களிலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டறிந்து கைது செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது, இலங்கை எல்லையை ஒட்டிய தமிழக கடலோர மாவட்டங்களில் முக்கியமாக தென் மாவட்டங்களில் நாட்டின் பாதுகாப்பை உறுதி படுத்த முழு வீச்சில் இறங்கியுள்ளதாம் மத்திய மாநில ஏஜென்சிகள்.
இதன் முழு பயன் 6 முதல் 12 மாதங்களில் வெளிப்படையாக தெரியவரும் என கூறப்படுகிறது, V என இந்த திட்டத்திற்கு பெயர் வைத்துள்ளதாகவும் இரண்டு மாநிலங்களிலும் சோடை போகாத காவல்துறை (IPS) உயர் அதிகாரிகள் நியமனம் செய்ய உள்ளதாகவும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்த மாற்றங்கள் அரங்கேறும் எனவும் தெரியவந்துள்ளது.