Tamilnadu

கருப்பு சட்டை ஊதா சட்டை டோட்டல் குளோஸ் மரண மாஸ் காட்சிகள் ருத்ரதாண்டவம்! இறுதியில் வரும் பெண் யார் குறியீடு?

rudrathandavm story
rudrathandavm story

ருத்ரதாண்டவம் திரைப்படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடிவிற்கு கொண்டுவந்து நேற்றே வெற்றி பெற்றது ருத்ரதாண்டவம், இந்த சூழலில் இன்றைய தினம் வெள்ளி திரையில் வெளியாகியுள்ளது ருத்ரதாண்டவம்.


படம் பல்வேறு இயக்குனர்கள் பேசாத கதைகளை பேசியிருப்பதாக படத்தை பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் தெரிவித்த நிலையில் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது, அரசியல் வாதிகள், இயக்குனர்கள் பாக்யராஜ், தங்கர் பாச்சன் ஆகியோரின் பாராட்டுக்கள் படத்தை அடுத்த நிலைக்கு ப்ரொமோட் செய்ய உதவிய நிலையில் படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கிறது.

கதாநாயகன் ரிச்சி ரிச்சர்ட் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார், அவ்வாறு ஒரு பப்பில் நடக்கும் போதை பொருள் பயன்பாட்டை வித்தியாசமான முறையில் கையாண்டு கண்டறிகிறார், இந்த சூழலில் நேர்மையான அதிகாரியான ரிச்சி ரிச்சர்ட் பணத்திற்கு விலை போகமாட்டார் என்பதை அறிந்த கெளதம் வாசுதேவ் மேனன் குழு அவர் மீது PCR வழக்கை பயன்படுத்தி வேலையை பறிக்கிறது.

அதன் பிறகு  சட்டத்தை தவறாக பயன்படுத்தி தனது வேலை பறிபோனதற்கு எதிராக களத்தில் இறங்குகிறார் நாயகன், அதன் பின்பு கடவுள் இல்லை என பேசுகிற நாத்திக கும்பல், கட்டாய மதமாற்றத்திற்கு வேலை செய்யும் நபர்கள் அவர்களால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என விரிவாக அலசுகிறது படம்.ஊதா சட்டை கதாபாத்திரம் இந்த திரைப்படத்திலும் வருகிறது,

காவல் துறை அதிகாரி ரிச்சர்ட் அதாவது ருத்ரன் மீது போடப்பட்ட பொய் குற்றச்சாட்டிற்கு ஆதரவாக பேட்டி கொடுக்கும் காதபாத்திரம் இவற்றில் இடம்பெற்று இருக்கும் மொத்தத்தில் திரைப்படம் மரண மாஸாக வெளிவந்துள்ளது,திரைப்படத்தில் இறுதியில் வரும் பெண் காவல்துறை அதிகாரி காதாபாத்திரம் நின்று பேசும் வகையில் அமைந்துள்ளது. மொத்தத்தில் திரை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது ருத்ரதாண்டவம்.