Tamilnadu

கிஷோருக்கு ஒரு நீதி நந்தினிக்கு ஒரு நீதியா? குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவாளா நந்தினி?

Kishor k swamy
Kishor k swamy

கொரோனவை வெல்ல ஒரே ஆயுதம் தடுப்பூசி என உலகமே ஏற்று கொண்ட நிலையில் இதுவரை பாரதம் முழுவதும் 30 கோடிக்கு மேலான இந்தியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர், குறிப்பாக இந்தியாவே தடு பூசியை கண்டறிந்து மத்திய அரசு இந்தியர்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசியை வழங்குகிறது.


மக்களின் உயிரை காப்பாற்ற பல்வேறு கட்ட முயற்சிகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றனர், மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து இந்தியர்கள் உயிரை காப்பாற்ற பாரதம் முழுவதும் இரவு பகலாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆனால் இவை அனைத்தையும் இழிவு செய்வது மட்டுமல்லாமல் களங்கம் விளைவித்து வருகிறாள் நந்தினி.

தன்னை மது ஒழிப்பு போராளியாக காட்டி கொள்ள வருடத்திற்கு தன் தந்தையுடன் சேர்ந்து ஏதாவது ஒரு போராட்டத்தில் ஈடுபட்டவள் தற்போது பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை தரைகுறைவாக பேசும் செயலை மேற்கொண்டு வருகிறாள், இந்நிலையில் தற்போது புதிதாக போராட்டம் ஒன்றை அறிவித்து இருக்கிறாள் .

அதில் கிரிமினல் கும்பலின் தலைவன் மோடியை வீழ்த்தாமல் இந்திய மக்கள் யாரும்  நிம்மதியாக வாழ முடியாது..கைாரானாவின் பெயரில் அந்நிய சக்திகளுடன் சேர்ந்து சதி செய்து ஆபத்தான மருந்துகளை - கொடுத்து பல லட்சம் இந்தியர்களை படுகொலை செய்த கொடுங்கோலன் மோடியை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்கிலிட வேண்டும் எனக் கோரி,காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்குவதாக தெரிவித்துள்ளாள்.

அருகில் அவள் தந்தையும் நிற்க போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர், தொடர்ந்து பிரதமரை தரக்குறைவான வார்த்தைகளில் எழுதியும் விமர்சனமும் செய்து வரும் நந்தினியை கைது செய்ய சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கும் சூழலில் இன்றும் தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு அல்லது பாஜகவினர் கண்களில் இது போன்ற செயல்கள் தென்படவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது தடுப்பூசி குறித்து போலி செய்தியை பரப்பி மக்களிடையே பீதியை உண்டு செய்வது ஆகிய தண்டனை குறிய குற்றத்தை செய்த நந்தினி மற்றும் அவளது தந்தை ஆகியோர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வளர்களின் கோரிக்கையாக உள்ளது, அதே நேரத்தில் பாஜகவினர் நந்தினி போன்ற சில்லறை போர்டு போராளிகளை சட்ட நடவடிக்கையில் இருந்து கண்டுகொள்ளாமல் விடுவதே பிரதமர் மீதான எதிர்ப்பை தமிழகத்தில் விதைக்க காரணமாக அமைவதாக கூறப்படுகிறது.

நந்தினி அவளது தந்தை மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து சுகாதாரம் குறித்தும் போலி தகவலை பரப்பும் அவள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.