பிரபல செய்தி வாசிப்பாளர் பனிமலர் திமுக ஆதரவு ஊடகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் இவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு ஒன்று சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, இது குறித்து பணிமலர் எழுதிய பதிவு பின்வருமாறு :-
நியாயமான வழில பணம் சம்பாதிப்பது மிகவும் சிரமம். அதுவும் யாருடைய உதவியும் இல்லாமல், இந்த மாதிரி ஒரு கடும் காலகட்டத்தில். நான் கடந்த ஒரு வருடமாக பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்படுகிறேன். அதற்காக சோர்ந்து போகவில்லை. ஸ்மார்டாக யோசிக்கிறேன், எனக்கு என்ன செய்ய முடியும், என்ன தெரியும் என்பதை யோசித்து அதில் கூடுதலாக பயிற்சிபெற்று கடுமையாக,
கால நேரம் பார்க்காமல் உழைத்து பணம் சம்பாதிக்கிறேன். நான் மட்டும் வளரவேண்டும் என்றில்லாமல் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேலையை நம்பி இருக்காதீர்கள் என அறிவுறுத்துவதுடன் மாற்று வேலைகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்குகிறேன். ஆனாலும் சில்லறைத்தனமாக தானும் எதுவும் செய்யமாட்டேன்,
நீ செய்வதை புறம்பேசுவேன், கெடுத்துவிடுவேன் என நினைத்தால் உங்களை ஒரு மனுசனாகவே நான் மதிக்கப்போவதில்லை, நான் செய்வதை நிறுத்தப்போவதும் இல்லை. இன்னும் அதிகமாக வேலை செய்வேன், சம்பாதிப்பேன், நண்பர்களையும் ஊக்கப்படுத்துவேன், சேர்ந்து வளருவோம். நீ பாத்து கறுவி சாவுஎன குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பனிமலர் யாரை இவ்வாறு குறிப்பிடுகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், கனிமொழியின் ஆதரவாளராக அறியப்பட்ட பனிமலர், உதயநிதி ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தியன்று தனது மகள் விநாயகர் சிலையை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து இதெல்லாம் தேவையில்லாத ஆணி என குறிப்பிட, பாஜகவினர் அதையே ட்ரெண்ட் செய்தனர்.
கடைசியில் தன் பதிவை நீக்கும் நிலைக்கு சென்று அமைதியானார் பனிமலர், அப்போதே பனிமலருக்கு எதிராக குரல்கள் எழுந்த நிலையில் தற்போது கூட இருந்த நண்பர்கள் சிலரே அவருக்கு வேலைக்கு ஏதேனும் சிக்கலை உண்டாக்கி விட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.