மாலை முரசு தொலைக்காட்சி தொடர்ந்து கிஷோர் கே ஸ்வாமிக்கு எதிராக சில தகவல்களை வெளியிட்டு வரும் சூழலில் தற்போது கிஷோர் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் இது குறித்து அவர் குறிப்பிட்ட தகவல்பின்வருமாறு :-
மாலை முரசு அறம் பற்றி பேசி என்னை கேள்வி கேட்டிருப்பது சரி , அதற்கு நான் பதில் அளிக்கிறேன் , அதே சமயத்தில் மாலை முரசின் தலைமை செய்தியாளர் கணேஷ் மரியதாஸ் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வீடு ஒன்றை பத்திரிக்கையாளர் கோட்டாவில் எடுத்து அதற்கு ஒன்றரை ஆண்டுகளாக வாடகையும் கட்டாமல் வைத்திருப்பதாக வரும் செய்தி உண்மையா ?
உண்மையெனில் , அது என்ன மாதிரி அறம் , வாடகை பாக்கியை அரசாங்கம் வசூல் செய்யாததன் காரணம் என்ன ? அரசாங்கத்திற்கு சாதகமாக நடந்துக் கொண்டால் சலுகைகள் என்பதாலா ? கணேஷ் மரியாதாசுக்கு சம்பளமே மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் என்கிற பொழுது , எதற்காக அரசாங்கத்தின் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு ? ஏழை பத்திரிகையாளர்கள் எத்தனையோ பேர் மேன்சன்களில் தங்கி கஷ்டப் படும் நிலையில் , இந்த ஊடக முதலைகளுக்கு எதற்காக சலுகைகள் ?
நாங்களும் கேட்போமுல்ல என குறிப்பிட்டுள்ளார் தொடர்ந்து கிஷோருக்கு எதிராக கருத்து சுதந்திரம்பெயரில் கருத்து தெரிவித்து வந்த ஊடகத்திற்கு எதிரான தனது கருத்தை கிஷோர் பதிவு செய்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கிஷோர் பதிவு வைரலாகும் அளவுக்கூட ஊடகம் வெளியிட்ட தகவல் வைரலாகவில்லை,