தமிழகத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி முன்னெடுத்த விவகாரம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது ,அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இந்துக்கள் தங்கள் அடைய அதை பெற கூடாது என்ற காரணத்திற்காக திராவிட கழகம் , நாம் தமிழர் கட்சி இன்னும் பிற மதத்தை சேர்ந்த இயக்கங்கள் வேலை செய்துவருவதாக பல நாட்களாக இந்து இந்து இயக்கங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன .
இந்த சூழலில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி வங்க தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது குறித்து தமிழகத்தில் அணைத்து இயக்கங்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தார் ,அவரது அறிவிப்பே கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது , ஏன் என்றால் அண்டை நாடுகளில் இந்துக்கள் பாதிக்கப்பட்டால் பொதுவாக தமிழகத்தை சேர்ந்த அரசியல் இயக்கங்கள் குரல் கொடுக்காது மாறாக கிறிஸ்தவ ,இஸ்லாமிய மக்களுக்கு பாதிப்பு என்றால் குரல் கொடுப்பார்கள் .
இந்த சூழலில் அதனை மாற்றி புது முயற்சியை மேற்கொண்டார் கிருஷ்ணசாமி , அந்த கூட்டத்தில் பேசிய கிருஷ்ணசாமி இந்து என்று பேசப்படுவதே தமிழகத்தில் பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது , அதனை உடைத்து எரியவே இந்த கூட்டம் , இந்து என்பது அவ்வளவு மோசமான சொல்லா ? இந்து என்பது சொல்வது அவமானமா ? நம்முடைய தந்தை ,தாத்தா எப்படி இந்துவாகத்தானே வாழ்ந்தார்கள் , வன்முறையை வைத்து தான் மதம் மாற்றினார்கள் விரும்பி யாரும் செல்லவில்லை எனவும் அதிரடியாக குறிப்பிட்டார் கிருஷ்ணசாமி.
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் அடையாளமும் இந்து தான் ,அதை சொல்வதில் என்ன அவமானம் இருக்கிறது அப்படி அவமானமாக கருதுகிறார்கள் என்றால் அவர்கள் பிறப்பில் குறை இருப்பதாக தெரிவித்தார் , இது தங்களை இந்து இல்லை என்று சொல்லி கொண்ட பலருக்கும் கொடுத்த சம்பட்டி அடியாக பார்க்கப்படுகிறது .
தங்களை இந்து இல்லை என பல அரசியல் வாதிகள் தெரிவித்து வருகின்றனர் , குறிப்பாக திருமாவளவன் இந்து என்ற சொல்லே வெள்ளைக்காரன் கொடுத்தது இதுஎன்ற மதமே இல்லை இன பேசியிருக்கிறார் , சீமான் போன்றவர்கள் , நாங்கள் சைவர்கள் , தமிழர்கள் இந்துக்கள் இல்லை என கூறிவருகின்றனர் , வீரமணி சுபவீ போன்றோர் இந்து என்ற மதம் குறித்தும் இந்து தெய்வங்கள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் .
இந்த சூழலில் இந்து இல்லை என சொல்பவர்கள் யார் என கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்து கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது இந்து என சொல்பவர்களை பிறப்பில் குற்றம் இருக்கலாம் என அவர் அழுத்தமாக குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்திலும் கடும் அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது , விரைவில் கிருஷ்ணசாமி போன்றோர் இனி வரும் காலத்தில் இந்துக்களுக்காக இன்னும் தீவிரமாக குரல் கொடுப்பதுடன் களத்திலும் இறங்கலாம் என்பதன் சமிக்கையை ஆர்பாட்டத்தின் மூலம் கிருஷ்ணசாமி குறிப்பிட்ட சிலருக்கு உணர்த்திவிட்டதாக பார்க்க படுகிறது .
இனி யாரவது இந்துக்கள் குறித்து தவறாக பேசினால் உங்களுக்கு இருக்கு கச்சேரி என வெளிப்படையாக தனது பேச்சின் மூலம் உணர்த்திவிட்டார் கிருஷ்ணசாமி . கிருஷ்ணசாமி பேசிய முழுமையான வீடீயோவை பார்க்க கிளிக் செய்யவும் .