தமிழக ஊடகங்கள் நேற்று நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை சேர்ந்த வேட்பாளர் ஒரு வாக்குகள் மட்டுமே வாங்கியதாகவும் அவரது குடும்பத்தினர் கூட பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என்ற செய்தியை வெளியிட்டன . முன்னணி ஊடகங்கள் சில இதனை பிரேக்கிங் செய்தியாகவும் வெளியிட்டன இந்த சூழலில் என்ன நடந்தது எந்த தகவல் வெளியாகியுள்ளது .
கோவையில் குருடம்பாளையம் எனும் வார்டில் இடைத்தேர்தல் நடந்தது இதில் கார்த்தி என்ற நபர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் , இவர் பாஜகவை சேர்ந்தவர் இவரது உடன் அதிமுகவை சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் , இந்நிலையில் கார்த்தி 4 வது வார்டை சேர்ந்தவர் என்பதால் போட்டியில் இருந்து ஒதுங்கி அதிமுகவை சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவருக்கு வேலை செய்துள்ளார் .
வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றார் இதுதான் நடந்த உண்மை கூட்டணி கட்சியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுத்து போட்டியில் இருந்து விலகி இருக்கிறார் கார்த்தி , இந்த சூழலில் கார்த்தி குடும்பத்தினர் கூட வேட்பாளருக்கு வாக்கு அளிக்கவில்லை என புதிய தலைமுறை தொடங்கி யூடுப் பிரபலங்கள் வரை செய்தி வெளியிட்டன , சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டவரை பாஜக வேட்பாளர் என செய்தி வெளியிட்டது முதல் பொய் .
4 வது வார்டில் இருக்கும் குடும்பத்தினர் எப்படி 9 வது வார்டிற்கு நடக்கும் இடைத்தேர்தலில் வாக்கு அளிக்கமுடியும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் போலி செய்தியை பரப்பியது இரண்டாவது தவறு , இந்த சூழலில் சட்டநிபுணர் குழுவுடன் ஆலோசனை செய்த தமிழக பாஜக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் போலி செய்தி வெளியிட்ட 24 மணி நேர தொலைக்காட்சிகள் மீது புகார் அளிக்கிறது .
இதுகுறித்த தகவல் காட்டு தீயாக பரவ புதிய தலைமுறை தான் முதலில் வெளியிட்ட போலி ஸ்லைட் கார்டை டெலீட் செய்துள்ளது ,டெலிட் செய்த கார்டில் குடும்பத்தினர் கூட பாஜக வேட்பாளருக்கு வாக்கு அளிக்கவில்லை என போலி செய்தியை பரப்பியது குறிப்பிடத்தக்கது ,இவை தவிர்த்து பல்வேறு ஊடகங்கள் தங்கள் வலைதளத்தில் தாங்கள் வெளியிட்ட செய்தியை திருத்தியம் அழித்தும் வருகின்றன .
இருப்பினும் பாஜக ஐ.டி பிரிவு தாங்கள் இரவு முழுவதும் url லிங்க் ஆகியவற்றை சேகரித்து தலைமையிடம் கொடுத்துள்ளனர் இந்த நிலையில் கேரளாவில் ஆசியாநெட் ,24 செய்தி தொலைக்காட்சி ஆகியவை போலி செய்தி வெளியிட்ட காரணத்தால் ஒளிபரப்பு சில நாட்கள் தடை செய்யப்பட்டது போன்று தமிழகத்தில் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது .
நேற்று நடந்த போலி செய்தி பரப்பப்பட்ட சம்பவம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி காட்டமாக பதிவிட்டுள்ளார் இது குறித்து அவர் தெரிவித்ததாவது தன் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு பயந்து கூட்டணி சின்னத்தில் போட்டியிடுபவர்களும், தன் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு கூட்டணி கட்சியிடம் செலவுக்கு 25 கோடிக்கு சொந்த கட்சியை அடமானம் வைத்தவர்களும், சொந்த கட்சி பெரிய கட்சியாக இருந்தாலும், தோற்று விடுவோம் என்ற பயத்தில் பிரிவினைவாதிகளையும், மத அடிப்படைவாதிகளையும்,
புறம்போக்குகளையும், களவாணிபயல்களையும் கூட்டணியில் இணைத்து கொண்டு தட்டு தடுமாறி பெற்ற வெற்றியை தங்களின் சொந்த வெற்றி என்று சொந்தம் கொண்டாடுபவர்களும், சுயேச்சையாய் தன் சொந்த சின்னத்தில் போட்டியிட்ட ஒருவனை ஒரு ஓட்டு பெற்றதாக எள்ளி நகையாடுவது கோழைத்தனம். ஒரு சீட் கூட வெற்றி பெறாத 2014 ஐ நினைவில்லையென்றால் அதுவே அழிவின் ஆரம்பம்.
சிங்கம் சிங்கிளாக தான் வரும். பன்றிகள் தான் கூட்டமாக வரும். Better luck next time Karthik. என குறிப்பிட்டுள்ளார் . இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த விளக்கத்தை பார்க்க கிளிக் செய்யவும் .