Cinema

லியோ வசூலுக்கும் - எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!.....லோகேஷ்!

actor vijay, lokesh kanagaraj
actor vijay, lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான விமர்சனம் கலவையாக பேசப்பட்டது. இதனை இயக்குனர் மனம் திறந்து ஒப்புக்கொண்டு பேசியுள்ளார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம் படம் பெரும் அளவு வெற்றி பெற்றது. முழுக்க முழுக்க லோகேஷ் கதைக்களமாக அமைந்தது.


அதன்பிறகு விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் அந்த படத்தின் கதை விஜயின் 50%ம் லோகேஷின் 50%ம் கதைகளமாக இருந்தது. மாஸ்டர் படம் சில மாற்றத்தினால் படம் தொய்வை ஏற்படுத்தியது. கைது, விக்ரம், மாநகரம் ஆகிய படங்கள் அனைத்தும் 100% லோகேஷ் படமாக இருந்ததால் சிறிதும் பிசிறு தட்டாமல் ரசிகரக்ளுக்கு விருந்தாக அமைந்திருப்பதாக கூறப்பட்டது .லியோ படம் 19ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பத்தி சுமாராகவே இருந்தது குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் லியோ படம் முழுக்க தொய்வாகவே இருந்தது என்று ரசிகர்கள் விமர்சனத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இதற்கிடையில் படக்குழு 500கோடி வசூல் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இது உண்மையிலேயே வசூல் ஈட்டியதா என்று கேள்வி எழுந்தது.இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடைபெற்ற 'ஜப்பான்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் 'லியோ' திரைப்படத்தின் வசூல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், "மக்களுக்கு படம் பிடித்திருக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பார்த்தோம். படத்தின் இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருப்பதாக விமர்சனங்கள் வந்தன.

அதை ஏற்றுக்கொள்கிறேன். எனது வேலை அதோடு முடிந்தது. திரைப்படத்தின் வசூலுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. அதைப் பற்றி தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும் லியோ படத்தின் சக்சஸ் மீட் குறித்த அப்டேட் இன்னும் ஓரிரு தினங்களில் வரும்" என்று தெரிவித்தார்.மேலும், விஜய் படம் குறித்து விஜய் என்ன சொன்னார்  என்று கேட்டதற்கு, விஜய் ரொம்ப ஹாபியாக இருப்பதாகவும், அவர் என்னிடம் தொலைபேசியில் பேசியிருந்தார். இன்னும் அவரை நான் நேரில்  பார்க்கவில்லை என்று கூறினார்.அதுமட்டுமின்றி லியோ படத்தின் கதை தான் 5 ஆண்டுகளுக்கு முன் ரெடி பண்ணதாகவும் அதில் மாற்றங்கள் இல்லாமல் முழுமையாக எடுத்திருப்பதாக கூறினார்.

கடைசியாக கைதி 2ம் பாகம் குறித்து பேசினார். அதில், இந்த படத்தில் நிச்சயம் ஸ்ட்ராங்காக இருக்கும் அனைவரது பங்களிப்பும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். இதன் மூலம் கைதி2ம் பாகத்தில் எல்சியுவில் உள்ள ரோலெக்ஸ் சூர்யா, விக்ரம் கமல், லியோ தாஸ் விஜய் ஆகியோரின் கேமியோ இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கைதி 2 படம் பிறகு சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி, ரோலெக்ஸ் ஆகிய படத்தினை இயக்கப்போவதாக அவர் கூறினார்.