உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு முயற்சி செய்துவரும் நிலையில் ஏன் திட்டத்திற்கு "கங்கா" என பெயர் வைத்தது எனவும் எது போன்ற முயற்சியை மத்தியஅரசு செய்து வருகிறது என ஸ்டான்லி ராஜன்" தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-
மோடி மிக சிறந்த நிர்வாகி அதைவிட சிறப்பானது அவரின் அமைச்சரவை, இப்பொழுது உக்ரைனில் இருந்து "ஆப்பரேஷன் கங்கா" என இந்தியர்களை அழைத்துவரும் திட்டத்தை மிக வேகமாக செய்து இந்தியர்களை மீட்டு கொண்டிருக்கின்றார்
இந்த திட்டத்துக்கு கங்கா என பெயரிடபட்டிருப்பது கொஞ்சம் அரசியலானது, பொதுவாக ரஷ்யாவினை அதன் பெரும் நதியான வோல்கா பெயர் சொல்லி அழைப்பார்கள், இந்தியா தன் நதி பெயரை சொல்லி அழைத்து வருகின்றது, கங்கா எனும் பெயருக்கு காப்பவள் எனும் அர்த்தமும் உண்டு
இப்பொழுது இன்னும் மீட்பினை வேகபடுத்த மோடி அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி விகே சிங் உள்ளிட்ட 4 அமைச்சர்களை அனுப்ப திட்டமிட்டு ஆலோசனை நடத்துகின்றார், இவர்கள் போலந்து ரோமேனியா ஹங்கேரியில் இருந்து மீட்பு நடவடிக்கையினை வேகபடுத்தமுடியுமா என திட்டம் பரிசீலிக்கபடுகின்றது. இந்த விவகாரத்தில் செல்லும் 4 பேரும் மிகபெரிய பின்புலம் கொண்டவர்கள்
ஜோதிராதித்ய சிந்தியா விமானதுறை அமைச்சர் இவர் விமான போக்குவரத்துக்கான ஆணைகளை வேகமாக பிறப்பிக்க இயலும், அபடியே அமைச்சர் கிரண் ரிஜு சட்டம் படித்தவர் உலக நடைமுறை சட்டங்களும் அவருக்கு அத்துபடி.,
இவர்களால் அங்கு உலக சட்டங்களுக்கு உட்பட்டு விமானங்களை வேகமாக இயக்க முடியும் அப்படியே இதர அமைச்சர்களான பூரியும், விகே சிங்கும் ராணுவ வித்தகர்கள். அதிலும் ஹர்தீப்சிங் பூரி விடுதலைபுலிகள் காலம் முதல் பல இடங்களில் இம்மாதிரி குழப்பம் நடந்த நேரங்களில் பணியாற்றிய அனுபவம் நிரம்ப கொண்டவர்.
இவர்களால் உக்ரைன் ராணுவத்துடன் பேசமுடியும் ரஷ்ய ராணுவத்துக்கும் சில சிக்னல்களை காட்டமுடியும், மிக சிறந்த குழுவினை அனுப்ப திட்டமிடுகின்றார் மோடி, ஒரு நல்ல தலைவன் எப்படி சிந்திப்பான் எப்படி ஆற்றலுள்ள சரியான நபர்களை சரியான இடத்துக்கு அனுப்புவான் என்பதற்கு மோடி மிகசிறந்த எடுத்துகாட்டு.
இந்த இடத்தில் அவர் இதர பாஜக முகங்களை காட்டி அரசியல் செய்யவில்லை இதர வெட்டி உதார்களை விட்டு வெற்று விளம்பரம் தேடவில்லை, எது யாரால் முடியுமோ, யாருடைய சேவை இந்த நேரத்தில் தேவையோ அவர்களை அனுப்புகின்றார்.
இந்த 4 பேரில் ஒருவருக்கு இணையான அதிகாரமும் அனுபவமும் தமிழகத்தில் யாருக்காவது உண்டா என சொல்லுங்கள் என்றால் பதில் உங்களுக்கே தெரியும், ஆம் அனுப்ப வேண்டியவர்களை அனுப்பினால்தான் உலக அரங்கில் சில விஷயம் எளிதாகும் மாறாக தமிழகத்தில் இருந்து சிலரை அனுப்பினால் என்னாகும்?
ரஷ்ய ராணுவம் கொலுசு, மூக்குத்தி , ஹார்ட் பாக்ஸ், வோட்கா பாட்டில் , இரண்டாயிரம் ரூபிள் பணம் இதற்கெல்லாம் போர் நிறுத்தம் செய்யுமா என்ன? இல்லை உக்ரைன் ராணுவம் மட்டும் பட்டுசேலைக்கு பல்லிளிக்குமா என்ன எனவும் சிலருக்கு புரியும் படி தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் ஸ்டான்லி ராஜன்.
More Watch videos