தமிழர்களுக்கு புத்தாண்டு என்பது காலம் காலமாக சித்திரை மாதத்தில் கொண்டாடுவது வழக்கம் ஆனால் திடீர் என திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழ் புத்தாண்டு தை 1 -ம் தேதி என மாற்றினார், பின்பு வந்த அதிமுக ஆட்சியில் மீண்டும் சித்திரை மாதமே தமிழ் வருட பிறப்பு என்று மாற்றி அரசாணை வெளியிட்டார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
இந்த சூழலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக மீண்டும் தை-1 ம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க எண்ணிய நேரத்தில் ஆளுநர் தலையீட்டால் அது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த சூழலில் எது தமிழர் புத்தாண்டு என்ற ஒரு தகவல் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது அதில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் பின்வருமாறு :-
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான் தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கணித்த வானியல் சாஸ்திரம்.
சித்திரை 1,ஆடி 1, ஐப்பசி 1,தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும், அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும், இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, திரும்பி கிழக்கு வந்து, தொடர்ந்து தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்.
சரி இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox) அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice) மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox) மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்... #சித்திரை (vernal equinox) - புத்தாண்டு. #ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு. #ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி. #தை 1(winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது, இப்போது சொல்லுங்கள் இனி தமிழ் புத்தாண்டு எது என யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா? அரசியலுக்காக காலம் காலமாக மன்னர் காலம் முதல் கொண்டாடும் தமிழ் புத்தாண்டை மாற்ற நினைப்பது என்பது நிச்சயம் பின்னடைவை சந்திக்கும் என்றே அறியலாம்.